மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 124 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணை.
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை (ஜூன்.2) இன்று காலை 8 மணி நிலவரப்படி 112 கன அடியிலிருந்து 124 கன அடியாக அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணை 120 அடி உயரம் கொண்டது. இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும்-சரிவதுமாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,000 கன அடியாக நீடிக்கிறது. இதே போல், மேட்டூர் அணைக்கு நேற்று (ஜூன்.1) சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 112 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஜூன்.2) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 124 கன அடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, வினாடிக்கு 2,100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை 46.42 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 46.11 அடியாகவும், நீர் இருப்பு 15.45 டிஎம்சியாகவும் சரிந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu