/* */

திருவண்ணாமலையில் நெகிழி தவிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

திருவண்ணாமலையில் நெகிழி தவிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் நெகிழி தவிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
X

மாரத்தான் போட்டியினை துவக்கி வைத்த கலெக்டர் முருகேஷ்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை வலியுறுத்தும் வகையில் ஒற்றை பயன்பாடு நெகிழி தவிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மாரத்தான் போட்டி மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான மாரத்தான் போட்டி திருவண்ணாமலை அண்ணா நுழைவாயில் அருகிலும் தொடங்கின.இதனை கலெக்டர் முருகேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த மாரத்தான் போட்டி கிரிவலப் பாதையில் உள்ள சூரிய லிங்கம் கோவில் அருகே நிறைவடைந்தது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் காமராஜ், உதவி பொறியாளர் கதிர்வேலன், மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன் மற்றும் அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

குளம் நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரும் பணி துவக்கம்

பின்னர் தண்டராம்பட்டு வட்டம் வரகுரு கிராமத்தில் நடைபெற்ற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் குளம் நீர் வரத்து கால்வாய்கள் தூர் வாரும் பணியினை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், 15 ஏக்கா் கொண்ட தரிசு நில தொகுப்பில் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் மின் இணைப்பு மற்றும் மின் மோட்டாருடன் கூடிய திறந்த வெளிக் கிணறு (அ) ஆழ்துளைக் கிணறு அமைத்துத் தரப்படும்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்து, மின் இணைப்புடன் கூடிய மின் மோட்டாா் வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் 10 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனா் என்றாா்.

நிகழ்ச்சியில் வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Updated On: 18 May 2023 1:08 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாக வழக்கு, சிறப்பு...
  2. நாமக்கல்
    பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பேச்சைக் கண்டித்து மகளிர் காங்கிரசார்...
  3. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.23 கோடி
  4. நாமக்கல்
    நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து ரூ. 17 லட்சம்...
  5. தமிழ்நாடு
    திருவண்ணாமலை To சென்னை கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே!
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2...
  7. ஈரோடு
    அத்தாணி அருகே தீர்த்தம் எடுக்க வந்த போது பவானி ஆற்றில் மூழ்கி இருவர்...
  8. ஈரோடு
    மொடக்குறிச்சி அருகே ஆற்றில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு
  9. ஈரோடு
    ஈரோட்டில் மோடியின் பேச்சை கண்டித்து மகிளா காங்கிரசார் தாலி ஏந்தி...
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?