நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து ரூ. 17 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை

Namakkal news- நாமக்கல் அருகே பகல் நேரத்தில் வீட்டில் புகுந்து ரூ. 17 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை (மாதிரி படம்)
Namakkal news, Namakkal news today- நாமக்கல் அருகே பகல் நேரத்தில் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் ரூ. 17 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளை அடித்துச்சென்றனர்.
நாமக்கல் அருகே, நல்லிபாளையத்தை சேர்ந்தவர் பத்மநாபன் (60) ஓய்வு பெற்ற அரசு பஸ் கன்டக்டர். அவரது மனைவி மல்லிகா (55). அவர்கள், மோகனூர் அருகே மூங்கில்பட்டியில் உள்ள சம்பந்தி வீட்டுக்கு கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக, நேற்று மதியம், 12:30 மணிக்கு சென்றுவிட்டனர். மாலை, 3:30 மணிக்கு, வீட்டுக்கு திரும்பினர். அப்போது, வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு, உள் பக்கமாக தாழிடப்பட்டுள்ளதை கண்டு திடுக்கிட்டனர். பின்னர் வீட்டின் பக்கமாக சென்று உள்ளே பார்த்தபோது, வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த, 34.5 பவுன் எடையுள்ள தங்க நகை திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து, நல்லிபாளையம் போலீசில் புகார் செய்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், கை ரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். பட்டப்பகலில் வீட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், 34.5 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu