/* */

அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம்

திருவண்ணாமலை ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது

HIGHLIGHTS

அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம்
X

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இன்று மதியம் 2 மணிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.

இன்று மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை மாலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.

அதேபோல் மலை சுற்றும் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலை, ஆதிஅண்ணாமலை திருக்கோயில், ஸ்ரீ ரமணாஸ்ரமம், ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமம், ஆகிய இடங்களில் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

Updated On: 20 Oct 2021 2:47 PM GMT

Related News