/* */

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கணினி மூலம் மூன்றாம் கட்ட சீரற்றமயமாக்கல் பணிகள்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கணினி மூலம் மூன்றாம் கட்ட சீரற்றமயமாக்கல் பணிகள் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கணினி மூலம் மூன்றாம் கட்ட சீரற்றமயமாக்கல் பணிகள்
X

மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற கணினி மூலம் மூன்றாம் கட்ட சீரற்றமயமாக்கல் பணிகள் 

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கணினி மூலம் மூன்றாம் கட்ட சீரற்றமயமாக்கல் பணிகள் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024- ஐ முன்னிட்டு, பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, தலைமை வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் இதர வாக்குப்பதிவு அலுவலர்கள் 1, 2 & 3-ஆகியோர்களுக்கு வாக்குச்சாவடி வாரியாக பணி ஒதுக்கீடு வழங்கிடும் பொருட்டு கணினி மூலம் மூன்றாம் கட்ட சீரற்றமயமாக்கல் பணிகள் திருவண்ணாமலை மற்றும் ஆரணி பாராளுமன்றத் தொகுதிகளின் தேர்தல் பொது மேற்பார்வையாளர்கள் (General Observers) முன்னிலையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் , அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது மேற்பார்வையாளர் மகாவீர் பிரசாத் மீனா மற்றும் ஆரணி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது மேற்பார்வையாளர் சுஷாந்த் கவுரவ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் தலைமை வாக்கு சாவடி அலுவலர்கள் மற்றும் இதர வாக்குப்பதிவு அலுவலர்கள் என திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 11,408 அலுவலர்களுக்கு வாக்குச்சாவடி வாரியாக பணி ஒதுக்கீடு வழங்கிடும் பொருட்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்

இந்நிகழ்ச்சியில் ஆரணி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர்கள் மற்றும் அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள், நுண் மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 18 April 2024 1:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வளையோசை கலகலவென ஓசை கேட்கும் வளைகாப்பு நிகழ்ச்சி..!
  2. தமிழ்நாடு
    புருவம் வழியாக மூளைக் கட்டிக்கான உலகின் முதல் கீஹோல் அறுவை சிகிச்சை:...
  3. அரசியல்
    காங்கிரஸ் சரிவுக்கு காரணம் அறியாமை, சோம்பேறித்தனம், ஆணவம்: சொல்கிறார்...
  4. லைஃப்ஸ்டைல்
    கண்டவுடன் கேட்கும் முதல் கேள்வி, "சாப்பிட்டியாப்பா"..? அம்மா..!
  5. தென்காசி
    ராஜீவ் காந்தி நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
  6. தென்காசி
    பட்டுப்புழு கூடு உற்பத்தி பாதிப்பு; நிவாரணம் வழங்க விவசாயிகள்
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்துறை பணிகளை திடீர் ஆய்வு செய்த ஆட்சியர்
  8. தொண்டாமுத்தூர்
    கோவை தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து நகை பணம் கொள்ளை
  9. உலகம்
    5 நிமிடங்களில் 6,000 அடி இறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ...
  10. கோவை மாநகர்
    கோவையில் தொடர் கனமழை ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு