கோவை தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து நகை பணம் கொள்ளை

கோவை தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து நகை பணம் கொள்ளை
X

கொள்ளை நடைபெற்ற வீட்டில் போலீசார் விசாரணை நடத்தினர்.

கோவை தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் பின் பகுதியில் ஓட்டை பிரித்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சாலை அருகே உலியம்பாளையம் அடுத்த குப்புசாமி வீதியில் குடியிருப்பவர் ஞானசுந்தரம் என்ற குமார் (வயது44). இவர் கொசு வலை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். கோடை விடுமுறை என்பதால் இவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தனர். நேற்று மதியம் அவர்களை அழைத்து வர குமார் தன் வீட்டை பூட்டி விட்டு சென்று உள்ளார். இன்று காலை 7 மணி அளவில் தன் மனைவி குழந்தைகளுடன் தன் வீட்டை வந்து திறந்து பார்த்த போது, படுக்கை அறை உள்ளே இருந்த பீரோ திறக்கப்பட்டு ஆடைகள் களையப்பட்டு இருந்தன. மேலும் பீரோவில் வைத்து இருந்த நகை - பணம் காணாமல் போய் இருந்தது.

மேலும் வீட்டின் பின் பகுதியில் ஓடு பிரிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் வடிவேல் குமார் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டார். வீட்டின் உரிமையாளரிடம் விசாரித்த போது, நகை 22 பவுன், பணம் 3 லட்சம் வரை கொள்ளை போனதாக‌ முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. கொள்ளையடித்து சென்ற கொள்ளையன் வீட்டின் நடுவே மலம் கழித்து சென்று உள்ளதும் தெரியவந்தது. இந்த திருட்டு சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!