/* */

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி
X

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக "நெகிழி மாசுபாட்டிற்கான தீர்வுகள்" என்ற மையக்கருத்தை வலியுறுத்தியும், மரக்கன்றுகள் நடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும், பொதுமக்களுக்கு மஞ்சப்பையுடன் மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் இலவசமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பின்னர் பல்வேறு தொழில் நிறுவனங்களின் பணியாளர்கள், கல்லூரி மாணவ-மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற நடைப்பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் மாணவ- மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டு பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், மண்வளம் காப்போம், துணிப்பையை பயன்படுத்து வோம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக புறப்பட்டனர்.

இந்த பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து திருவள்ளூர் முக்கிய வீதிகள் வழியாக சென்று காமராஜர் சிலையின் அருகே முடிவுற்றது. மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக மாவட்ட அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பை வழங்கிய பட்டாபிராம் இந்து கல்லூரி மற்றும் துவக்கம் தொண்டு நிறுவனம் ஆகியவற்றிக்கு தலா ரூபாய் ஒரு இலட்சம் வீதம் ரூ. 2 இலட்சத்திற்கான காசோலைகளையும், சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரன், உதவி பொறியாளர்கள் கே.ரகு குமார், எஸ்.சபரிநாதன், திருமூர்த்தி, உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் டி.மணிமேகலை, பல்வேறு தொழில் நிறுவனங்களின் பணியாளர்கள், கல்லூரி மாணவ-மாணவியர், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Jun 2023 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  6. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...
  9. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்