/* */

கல்லூரிகள் திறப்பதை வரவேற்கிறாேம்: நெல்லையில் மூட்டா பொதுச்செயலாளர் பேட்டி

ஆன்லைன் வகுப்புகள் மாணவர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் தொடங்க வேண்டும்.

HIGHLIGHTS

கல்லூரிகள் திறப்பதை வரவேற்கிறாேம்: நெல்லையில் மூட்டா பொதுச்செயலாளர் பேட்டி
X

ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பெறும் வகையில் கல்லூரி மாணவர் சேர்க்கையை தமிழக அரசே நடத்த வேண்டும் என்று மூட்டா பொது செயலாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில் ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பெறும் வகையில் கல்லூரி மாணவர் சேர்க்கையை ஒற்றைச்சாரள முறையில் தமிழக அரசே நடத்த வேண்டும் என்று மூட்டா பொது செயலாளர் நாகராஜன் நெல்லையில் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து அவர் நெல்லையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:-

கொரோனா பாதிப்பு குறைந்து நிலையில், கல்லூரிகள் திறப்பதை வரவேற்கிறோம். ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டாலும், அது மாணவர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனவே சுழற்சி முறையில் அரசு நேரடி வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 3-வது அலையை அனைவரும் எதிர்பார்த்து கல்லூரிகள் திறப்பதை தாமதப்படுத்தாமல், உடனடியாக திறக்க வேண்டும்.

மாணவர்களின் எதிர்காலம் என்பது முக்கியமாகும். கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவ, மாணவிகள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. எனவே ஏழை, எளிய மக்களுக்கு கல்வி கிடைக்கும் வகையில், ஒற்றைசாரள முறையை பின்பற்றி, அரசே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு கல்லுரியில் சேரும் போது 7 சதவீதம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

குமரி மாவட்டம், தூத்தூரில் உள்ள புனித யூதா கல்லூரியில் நிர்வாக சீர்கேட்டினால் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. 1021 அரசாணையைப் பயன்படுத்தி மண்டல கல்லூரிக்கல்வி இயக்குனரே ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரி செயலாளர் நீக்கப்பட்ட விவகாரத்தில் தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்டத்தையும், உயர் நீதிமன்ற ஆணையையும் அமல்படுத்த கல்லூரிக் கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோன்று பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் முதல்வர் நியமனம், துறைத் தலைவர்கள் நியமனம், மாணவர் சேர்க்கை ஆகியவற்றில் தமிழக அரசாணை விதிகளை மீறி செயல்படுவதால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

Updated On: 12 Aug 2021 7:55 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vetrimaaran-னிடம் Viduthalai-2 Update கேட்ட ரசிகர்கள் !#vetrimaaran...
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.3 டன் ரேஷன் அரிசி...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை : விவசாயிகள் மகிழ்ச்சி..!
  4. வீடியோ
    திருப்புமுனையாகும் ஒரே ஒருவரின் ஆதரவு ! Relax செய்யும் BJP ! || #Modi...
  5. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  10. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...