/* */

திருநெல்வேலி மாநகராட்சியில் வாராந்திர மனுநீதி நாள் முகாம்

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருநெல்வேலி மாநகராட்சியில் வாராந்திர மனுநீதி நாள் முகாம்
X

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மனுநீதி நாள் முகாம் மேயர் பி.எம்.சரவணன் தலைமையில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

மனுநீதி நாள் முகாமில், சர்தார்புரம் சமூக ரெங்கையன் கட்டளை கிராமத்தில் தெருவிளக்கு அமைத்து தரவும், தச்சநல்லூர் கோட்டையடி தெரு, சங்கரன்கோவில் ரோடு சாலை அமைத்து தரவும், பேட்டை ஐடியா மெட்ரிக் பள்ளி அருகே கழிவு நீர் தேங்காமல் சீர் செய்திடவும், திருநெல்வேலி டவுன் குறுக்குதுறை கருமாரி மண்டபம் கல்பாலம் சீரமைத்திடவும், திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட வார்டு 1ல், ஆர்எஸ்ஏ நகரில் நியாய விலைக்கடை கட்டடம் அமைத்து தர கோரியும், காமராஜர் நகரில் தார்சாலை அமைத்து, தெருவிளக்கு மற்றும் பாதாள சாக்கடை அமைத்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் இன்று (26-4-22) மேயர் திரு.பி.எம்.சரவணன் அவர்களிடம் துணைமேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் முன்னிலையில் மனுக்களை அளித்தனர்.

மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்திடுமாறு அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் அறிவுறுத்தினார். மாநகராட்சி சார்பாக அதிக அளவில் வரி செலுத்தாத நபர்களின் பட்டியல் இன்று (26-04-22) வெளியிடப்பட்டது. வரி செலுத்தாதவர்களுக்கு உரிய அறிவிப்பு வழங்கப்பட்டு வரி செலுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இம்முகாமில் மாநகர் பொறியாளர் (பொ) என்.நாராயணன், உதவி ஆணையாளர்கள் லெனின் (பொ) தச்சை மண்டலம், ஐயப்பன் (மேலப்பாளையம்) ஜகாங்கீர் பாஷா (பாளையங்கோட்டை) சொர்ணலதா (கணக்கு)மாநகர் நல அலுவலர் மரு.வி.ராஜேந்திரன் மற்றும் உதவி செயற் பொறியாளர்கள் சாந்தி, பைஜூ, திடக்கழிவு மேலாண்மை பொறுப்பு ராமநாதன் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 27 April 2022 1:46 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  2. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  3. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  4. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  7. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  8. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  10. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்