/* */

தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு பயிற்சி: மாநகராட்சி ஆணையாளர் பங்கேற்பு

தேர்தல் அதிகாரிகள் பணிகள் குறித்த பயிற்சி நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு பயிற்சி: மாநகராட்சி ஆணையாளர் பங்கேற்பு
X

தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான தேர்தல் பயிற்சி மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணுசந்திரன் தலைமையில் நடைபெற்றது.

நெல்லை மாநகராட்சி தேர்தலில் மண்டல தேர்தல் அலுவலர்களாக பணி செய்யும் அதிகாரிகளுக்கான தேர்தல் பயிற்சி மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறுகிறது. நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் 4 லட்சத்து 16 ஆயிரத்து 389 வாக்காளர்கள் உள்ளனர். தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 1,200 வாக்காளர்களுக்கு மிகாமல் வாக்குச் சாவடிகள் அமைக்கும் பணி செய்து முடிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நெல்லை மாநகராட்சியில் 160 பகுதிகளில் மொத்தம் 490 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் 15 முதல் 20 வாக்குச்சாவடிகளாக பிரிக்கப்பட்டு மண்டல அளவிலான அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று மண்டல அளவில் நியமிக்கப்பட உள்ள தேர்தல் அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், வாக்குச்சாவடிகள் அமைவிடம் வாக்குச்சாவடி பெயர் போன்றவை குறித்த தகவல்களை வாக்காளர்கள் தெரியும் வகையில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்த பயிற்சி நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மண்டல அளவில் வாக்குப்பதிவு நாளன்று நியமிக்கப்பட இருக்கும் அதிகாரிகள், மாநகராட்சி தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை கையால்வது, வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறுகள் எதுவும் ஏற்பட்டால் சரி செய்வது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டது. இன்றைய தினம் பயிற்சி பெறும் அதிகாரிகள் வரும் 31ம் தேதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நடத்தப்படும் பயிற்சியின் போது பயிற்சி அளிக்க உள்ளார்கள்.

Updated On: 29 Jan 2022 10:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  6. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  7. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  9. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  10. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!