/* */

நெல்லையில் வரும் 29ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருநெல்வேலியில் வரும் 29ம் தேதி காலை 10.30 மணியளவில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

நெல்லையில் வரும் 29ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
X

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 29.04.2022 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருநெல்வேலியில் நடைபெறவுள்ளது.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 29.04.2022 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருநெல்வேலியில் வைத்து நடைபெறவுள்ளது. இம்முகாமில் பணிநியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. எனவும் இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்வி சான்று மற்றும் இதர சான்றுகளுடன் பங்கேற்று பயனடையலாம்.

இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் மற்றும் பங்கேற்கவிருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் தனியார் வேலை இணையத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) தங்களது விபரங்களை பதிவு செய்தல் வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு தகவல்களை பெறவும், முகாமில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் குறித்து அறியவும் NELLAI EMPLOYMENT OFFICE என்ற Telegram Channel-ல் இணைந்து பயன்பெறலாம். மேலும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைபிடிக்குமாறும் கா.ஹரிபாஸ்கர், உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருநெல்வேலி தெரிவித்துள்ளார்.

Updated On: 27 April 2022 2:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  4. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  5. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  6. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  7. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  9. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்