/* */

நெல்லை, ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு அமைப்பின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

நெல்லை, ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு அமைப்பின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நெல்லை, ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு அமைப்பின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
X

தேசிய அளவில் ஹாக்கி முகாமில் பயிற்சி பெறும் வீரர்களுக்காக ஆன்லைன் மூலம் ஹிந்தி, ஆங்கில வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ் நாடு அமைப்பினர் தெரிவித்தனர்.

அமைப்பின் தலைவர் சேகர் ஜெ மனோகரன் பேட்டியில் கூறியதாவது:-

2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள், ஜூனியர் உலக கோப்பை போட்டிகள் போன்றவற்றில் தமிழக வீரர்கள் பங்கேற்க நடவடிக்கைகள் மற்றும் பயிற்சிகள் அளிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. 11 வருடங்களுக்கு பின்னர் தமிழகத்தில் இருந்து 4 மாணவர்கள் தேசிய ஹாக்கி பயிற்சி முகாமுக்கு சென்றுள்ளனர். இந்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் தமிழகத்தின் பிரதிநிதியாக ஒருவர் மட்டும் சென்றுள்ளார். வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வண்ணம் ஹாக்கி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறார்கள். வீரர்கள் பயிற்சி அளிப்பதற்கும், தேர்வு செய்வதற்கும் அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கும் கோ ஒலிம்பிக் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.

கோ ஒலிம்பிக் திட்டத்தின் மூலம் வருவாய் வசதி இல்லாத 15 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான பல்வேறு உதவிகள். ஊட்டச் சத்தான உணவுப் பொருட்கள், விளையாட்டு உபகரணங்கள் போன்றவை வாங்கிக் கொடுக்கப்பட்டு பயிற்சிகளுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவிட் ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி தேசிய அளவில் முகாம் செல்லும் வீரர்களுக்கு பயிற்சி மற்றும் வீரர்களுடன் பழகுவதற்கு வசதியாக ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழித்திறன் பயிற்சிகள் ஆன்லைன் மூலம் அளிக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள சிறந்த வீரர்கள் 15 பேர் பயிற்சி பெறும் நிலையில் வரும் 2024 க்கு குறைந்தது 3 வீரர்களை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வைப்பதற்கான முழு முனைப்புடன் பணிகள் நடந்து வருகிறது. மேலும் அவர் கூறுகையில்,

ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு அமைப்பு மீது பல வேண்டாத தகவல்களை தெரிவித்து வருகிறார்கள். அமைப்பு மூலம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டிகளுக்கு தரப்பட்ட மானியத் தொகையில் ஊழல் நடைபெற்று வருவதாகவும் தவறான தகவல்களை சிலர் தெரிவித்து வருகின்றனர். ஹாக்கி அமைப்பு மீது தவறான தகவல்களை தெரிவிக்கும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.

Updated On: 4 July 2021 6:10 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...