/* */

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் அலுவலகம் திறப்பு விழா

நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் யூனியன் அலுவலக திறப்பு விழா மற்றும் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் அலுவலகம் திறப்பு விழா
X

நெல்லையில் காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் அலுவலகம் திறப்பு விழா மற்றும் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நெல்லையில் காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் அலுவலகம் திறப்பு விழா மற்றும் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் அலுவலகம் திறப்பு விழா மாநகர மாவட்டம், கிழக்கு மாவட்டம், தென்காசி மாவட்டம், மாவட்ட நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், வட்டார நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம், பேட்டை ரொட்டி கடை பேருந்து நிறுத்தம் காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநகர மாவட்ட தலைவர் காவேரி தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட தலைவர் ராபர்ட் சுஜின், நெல்லை மண்டல செயலாளர் சிவலிங்கம் முன்னிலை வகித்தனர். மாநில தலைவி புவனேஸ்வரி நஞ்சப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்து காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் நிர்வாகிகளுடன் யூனியன் வளர்ச்சி பணிகள் குறித்தும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தற்போதைய தமிழக அரசு அறிவித்துல்ல நல திட்டங்களையும் எடுத்துரைத்து உரையாடினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் தூத்துக்குடி மாவட்ட தலைவர் சிவராஜ் மோகன், நெல்லை மாநகர மாவட்ட நிர்வாகிகள் துணைதலைவர் மெடிக்கல் முருகன், பொதுச்செயலாளர் முத்தமிழ் கண்ணன், பொருளாளர் சுப்பையா, செயலாளர் இசக்கி எ ஜயப்பன், 48வது வார்டு தலைவர் பீர்மஸ்தான், கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் துணைதலைவி லீலாவதி, பொதுச்செயலாளர்

மேரி ஸ்டெல்லா ரோஸ், செயலாளர் கமலா, தென்காசி மாவட்ட நிர்வாகிகள் லெட்சுமி சைனி மேரி, திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி தலைவி கலைச்செல்வி, காங்கிரஸ் முன்னால் 2 மண்டல தலைவர் சேக்பக்கீர் மைதின், செல்லையா, கலில், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் இ.எஸ்.ஜ. மருத்துவ மனையில் சிகிச்சை பெற தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின்க்கு மாநில தலைமை மனு கொடுக்க வேண்டும், தொழிற் சங்கத்தில் அதிகமாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் அனைத்து நிர்வாகிகளுக்கும் பதவியுடன் போட்டோ ஒட்டிய அடையாள அட்டை மாநில தலைமை வழங்கவேண்டும் உள்ளிட்ட திர்மானங்கள் நிறைவேற்றபட்டன. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நெல்லை மண்டல தலைவர் இக்பால் நன்றி கூறினார்.

Updated On: 24 Oct 2021 2:14 AM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  2. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  4. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  7. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை