/* */

உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

நெல்லை மாவட்டத்தில் 397 வார்டுகளுக்கு 933 வாக்குச்சாவடிகளில் உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது.

HIGHLIGHTS

உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
X

வாக்கு எண்ணும் மையம் மற்றும் வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் பார்வையாளர் முனைவர் சி.ந.மகேஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - 2022 வாக்கு எண்ணும் மையம் மற்றும் வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் பார்வையாளர்/ அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முனைவர் சி.ந.மகேஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்-2022யை முன்னிட்டு, வாக்கு எண்ணும் மையமான சேரன்மகாதேவி பெரியார் மேல்நிலைப் பள்ளியையும், பத்தமடை, கோபாலசமுத்திரம் மற்றும் மேலச்செவல் ஆகிய பேரூராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு நடைபெறவுள்ள தேர்தல் வாக்குச்சாவடி மையங்களையும் மாவட்ட தேர்தல் பார்வையாளர்/ அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முனைவர் சி.ந.மகேஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்-2022 தேர்தல் தேதி 26.01.2022 அன்று மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - 2022, திருநெல்வேலி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளுக்கு 491 வாக்குச் சாவடிகளிலும், அம்பாசமுத்திரம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு 42 வாக்குச் சாவடிகளிலும், விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு 51 வாக்குச் சாவடிகளிலும், களக்காடு நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கு 30 வாக்குச் சாவடிகளிலும், 17 பேரூராட்சிகளில் உள்ள 273 வார்டுகளுக்கு 319 வாக்குச் சாவடிகளிலும் ஆக மொத்தம் 397 வார்டுகளுக்கு 933 வாக்குச் சாவடிகளில் தேர்தல் ஒரே கட்டமாக 19.02.2022 அன்று நடைபெறவுள்ளது.

சேரன்மகாதேவி, கோபாலசமுத்திரம், மேலச்செவல், மூக்கூடல், பத்தமடை, வீரவநல்லூர் ஆகிய பேருராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு நடைபெறும் தேர்தல் வாக்குப்பதிவுகளை வாக்கு எண்ணும் மையமான சேரன்மகாதேவி பெரியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.

அதன்படி இன்று சேரன்மகாதேவி, கோபாலசமுத்திரம், மேலச்செவல், பத்தமடை, ஆகிய பேருராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குப்பதிவுகளை எண்ணுவதற்கு ஏதுவாக தேர்வு செய்யப்பட்டுள்ள வாக்கு எண்ணும் சேரன்மகாதேவி பெரியார் மேல்நிலைப் பள்ளியையும், பத்தமடை பேரூராட்சியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தையும், கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் உள்ள பிராஞ்சேரி ஊராட்சி ஒன்றிய மையமான துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தையும், மேலச்செவல் பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தையும் மாவட்ட தேர்தல் பார்வையாளர்/ அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முனைவர் சி.ந.மகேஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தனபாலன் (பத்தமடை பேரூராட்சி), மாலதி (கோபாலசமுத்திரம் பேருராட்சி), சுந்தரவேல் (சேரன்மகாதேவி பேருராட்சி), லோபமுத்திரை (மேலச்செவல் பேருராட்சி) மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 7 Feb 2022 2:44 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...