/* */

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நெல்லையில் ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

HIGHLIGHTS

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நெல்லையில் ஆர்ப்பாட்டம்
X

நெல்லையில் இந்திய பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள தி.மு.க. தனது சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என அறிவித்திருந்தது. அந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசு சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் கூறியதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Updated On: 22 March 2022 3:35 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  2. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  3. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  4. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  5. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  6. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  7. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
  9. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    Tamilaga Vettri Kazhaga-தின் மாநாட்டில் பங்கேற்ப்பேன் !#tvk #tvkvijay...