/* */

பள்ளி மாணவர்கள் இறந்த சம்பவம்: தாளாளர், ஒப்பந்ததாரர் நீதிபதி முன் ஆஜர்

பள்ளியில் சுவர் விழுந்து 3 மாணவர்கள் இறந்தது தொடர்பாக தாளாளர், ஒப்பந்ததாரர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைப்பு.

HIGHLIGHTS

பள்ளி மாணவர்கள் இறந்த சம்பவம்: தாளாளர், ஒப்பந்ததாரர் நீதிபதி முன் ஆஜர்
X

நெல்லையில் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் பள்ளி தாளாளர், ஒப்பந்தகாரர் ஆகிய இருவரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைப்பு.

நெல்லை சாப்டர் பள்ளி தடுப்பு சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் பள்ளி தாளாளர், ஒப்பந்தகாரர் ஆகிய இருவரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு 31- ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நெல்லை டவுன் சாப்டர் பள்ளியின் கழிவறை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் நெல்லை சந்திப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இந்த விபத்து தொடர்பாக பள்ளி தாளாளர் சாமுவேல் செல்வராஜ், பள்ளி தலைமை ஆசிரியை ஞான செல்வி, மற்றும் கட்டிட ஒப்பந்தகாரர் ஜான் கென்னடி ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடந்து வந்த நிலையில் பள்ளி தலைமை ஆசிரியை ஞான செல்விக்கு விசாரணையின் போது நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பள்ளி தாளாளர் சாமுவேல் செல்வராஜ் மற்றும் ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி இருவரையும் போலீசார் பாளையங்கோட்டை நீதிபதிகள் குடியிருப்பிற்கு இன்று அதிகாலை அழைத்துச் சென்று குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 4 நீதிபதி ஜெய்கணேஷ் முன் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 31- ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் இருவரையும் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் கிளை சிறைக்கு அழைத்து சென்று அங்கு சிறையில் அடைத்தனர். நெஞ்சுவலி காரணமாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தலைமை ஆசிரியை ஞான செல்வியை நேரில் சென்று பார்வையிட்டு நீதிபதி விசாரணை நடத்தி நீதிமன்ற காவலுக்கு உத்தரவிடுவார் என கூறப்படுகிறது.


Updated On: 18 Dec 2021 3:16 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு