/* */

சில தினங்களுக்குள் குரூப் 4 தேர்வு அட்டவணை வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தலைவர்

இந்த ஆண்டிற்கான குருப் 4க்கான அட்டவணை இந்த மாத மத்தியில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிசி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

சில தினங்களுக்குள் குரூப் 4 தேர்வு அட்டவணை வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தலைவர்
X

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான கேள்வித்தாள், விடைத்தாள் வைக்கப்பட உள்ள கருவூலங்களை ஆய்வுசெய்த அதன் தலைவர் பாலச்சந்திரன் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், குரூப் 2 தேர்வுக்கு சிலபஸ் தயாரிப்பு பணி ஓரிரு தினங்களில் முடிவு பெறும். இந்த ஆண்டிற்கான குருப் 4 க்கான அட்டவணை இந்த மாத மத்தியில வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குரூப்-4 காலிப்பணியிடம் 5000 இருப்பதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. கலந்தாய்வு முடிவு பெறும் வரை காலிப் பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. டிஎன்பிஎஸ்சி ஆணையம் சிறப்பாக செயல்படுகிறது. தேர்வர்களுக்கு ஆணையம் மீது நம்பகத் தன்மை அதிகரித்துள்ளது.

டிஎன்பிசி தேர்வுகளுக்கு வினா மற்றும் விடைத்தாள்கள் கொண்டு செல்லும் வாகனங்களில் கேமராக்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாகனங்களை முழுமையாக கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே வினாத்தாள் முன்கூட்டியே வெளியாக வாய்ப்பில்லை. டிஎன்பிஎஸ்சி OTR கணக்குடன் ஆதார் இணைப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றுவிட்டது. மீண்டும் அதனை நீட்டிப்பு செய்ய வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். ஆனால் அரசின் சார்பில் இந்த அவகாசம் ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. என்று தெரிவித்தார்.

Updated On: 1 March 2022 9:06 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!