/* */

முன்னாள் முதலமைச்சர்காமராஜர் பிறந்த நாள்: பல்வேறு கட்சிகள் அமைப்பினர் மரியாதை

காமராஜரின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லையில் அவரது உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்பினர் மரியாதை

HIGHLIGHTS

முன்னாள் முதலமைச்சர்காமராஜர் பிறந்த நாள்: பல்வேறு கட்சிகள் அமைப்பினர் மரியாதை
X

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு அதிமுக, பாரதிய ஜனதா கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு அதிமுக, பாரதிய ஜனதா கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கல்விக்கண் திறந்த காமராஜர் பெருந்தலைவர் என்று மக்களால் போற்றப்படும் காமராஜர் அவர்களின் 120 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு முழுவதும் அவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் அதே வழியில் திருநெல்வேலி ரயில்வே சந்திப்பு நிலையம் முன்பு உள்ள அவரது முழு உருவ சிலைக்கு பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நைனார் நாகேந்திரன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோன்று அதிமுகவின் சார்பில் கட்சியின் மாவட்ட செயலாளர் கணேச ராஜா தலைமையில் ஏராளமான அதிமுகவினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் மேளதாளம் பட்டாசு வெடித்து ஊர்வலமாக வந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இது தவிர பல்வேறு அமைப்புகளின் சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On: 15 July 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  5. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  6. சேலம்
    மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,316 கன அடியாக அதிகரிப்பு