/* */

நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் 10 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மாணவிகள் சிலருக்கு லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்று உறுதி.

HIGHLIGHTS

நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் 10 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி
X

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மாணவிகள் சிலருக்கு லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் விடுதிகளை மூடவும் தொழில் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தவும் ஆலோசனை நடத்தி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரனோ நோய் தொற்று பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது அந்த வகையில் நெல்லை மாவட்டத்திலும் நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்டு தற்போது நாள்தோறும் சராசரியாக 10 பேர் வரை தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் இதனால் பல்வேறு தளர்வுகள் அரசால் அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர் இருப்பினும் மூன்றாம் அலையை கருத்தில் கொண்டு ஒருபுறம் தடுப்பூசி செலுத்தும் பணியிலும் மாவட்ட நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மாணவிகள் சிலருக்கு கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இங்கு தற்போது மருத்துவ மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவி ஒருவருக்கு கடந்த திங்கட்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருடன் தங்கியிருந்த விடுதி மாணவிகள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் மேலும் 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து மாணவிகளின் விடுதியை தற்காலிகமாக மூடப்பட்டு அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, ஒருசில மாணவர்கள் வெளியில் சென்று வரும்போது அவர்களுக்கு லேசான அறிகுறியுடன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றபடி விடுதி மற்றும் கல்லூரி வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது. இதுவரை தொற்று கண்டறியப்பட்ட யாருக்கும் பெரிய அளவிலான அறிகுறி இல்லை என்று தெரிவித்தார். இருப்பினும் அடுத்தடுத்து மேலும் பல மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் விடுதியை மூட நிர்வாகம் தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Updated On: 24 Nov 2021 12:31 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...