/* */

திமுகவின் மதச்சார்பற்ற கூட்டணிக்கு கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு: முத்தரசன்

திமுகவின் மதசார்பற்ற கூட்டணியை கம்யூனிஸ்ட் கட்சி முழுவதுமாக ஆதரிக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

திமுகவின் மதச்சார்பற்ற கூட்டணிக்கு கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு: முத்தரசன்
X

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்.

வருகிற பிப்ரவரி மாதம் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் மதசார்பின்மையை காப்பாற்றவும், அரசியல் அமைப்புச் சட்டத்தை காப்பாற்ற அனைத்து தொழிற் சங்கங்கள் ஒருங்கிணைந்து நடத்தும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நெல்லையில் தெரிவித்தார்.

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டமன்ற பாராளுமன்ற தேர்தலை போன்றே உள்ளாட்சி தேர்தலும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. வகுப்புவாத சக்திகள் இந்த தேர்தலில் வெற்றி பெறக்கூடாது. பாரதிய ஜனதா கட்சி குறுக்குவழியில் ஆட்சியை பிடிக்க முயற்சி செய்து வருகிறது. அதற்கு அதிமுக பலிகடா ஆகி விட்டது. அதிமுகவின் பலவீனத்தை பயன்படுத்தி பிஜேபி கூட்டணி வைத்து சவாரி செய்கிறது.

திமுகவின் மதசார்பற்ற கூட்டணியை கம்யூனிஸ்ட் கட்சி முழுவதுமாக ஆதரிக்கிறது. திமுக ஆட்சி மீது மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் உள்ளது. அவர்களும் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றனர்.

மதசார்பற்ற கொள்கையில் உறுதியாக திமுக உள்ளது. மத்திய அரசின் மாநில உரிமை பறிப்புகளை கடுமையாக எதிர்க்கிறது. மத்திய அரசு மாநில உரிமைகளை பறித்து அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசின் கீழ் கொண்டுவர முயற்சி செய்கிறது. இது நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் மிகப்பெரிய சீர் கேடாகும்.

சுதந்திரத்திற்கு பிறகு உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்பது சரியல்ல. ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயை தனியார் மயம் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

சுதந்திர போராட்ட வரலாற்றை மூடி மறைத்து திசை திருப்பி வரலாற்றைத் திரித்து கூறுவது மிகப் பெரிய அபாயம் ஆகும். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் சட்டமன்றத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆண்மை இல்லாமல் இருக்கிறார்கள் என வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். இது எந்த அளவிற்கு அதிமுக செயல்பாடுகள் உள்ளது என்றார்.

Updated On: 28 Jan 2022 9:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  2. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  4. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  5. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  6. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  7. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா
  9. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  10. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...