/* */

திருநெல்வேலி மாநகரில் குண்டு குழியுமான சாலையால் ஆம்புலன்சில் நடந்த சுகப்பிரசவம்..!

"குண்டும் குழியுமான ரோட்டை பராமரிக்காமல் விட்ட திருநெல்வேலி மாநகராட்சியை தான் உண்மையில் பாராட்ட வேண்டும்" -பொது மக்கள் கிண்டல்

HIGHLIGHTS

திருநெல்வேலி மாநகரில் குண்டு குழியுமான சாலையால் ஆம்புலன்சில் நடந்த சுகப்பிரசவம்..!
X

நெல்லையில் குண்டு குழியுமான சாலை. ஆம்புலன்சில் நடந்த பிரசவம்.

திருநெல்வேலி மாநகர் பகுதியில் பாதாள சாக்கடைக்கு தோண்டிய பள்ளங்களை சரியாக மூடாமல் விட்டுள்ளதால் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. இந்த சாலையில் வாகனத்தில் சென்றால் பிரசவம் நடந்து விடும் என கிண்டலாகச் சொல்வார்கள். நிஜமாகவே அந்த ரோட்டில் ஆம்புலன்சில் அழைத்து வந்த போது ஒரு கர்ப்பிணிக்கு நடுரோட்டில் பிரசவம் நடந்தது.

திருநெல்வேலி டவுன் சந்திப்பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜா 37. தனியார் நிறுவன ஊழியர். அவரது மனைவி மாரி(33).நிறைமாத கர்ப்பிணி. பிரசவ தேதி நெருங்கி இருந்தாலும் ஓரிரு நாளில் மருத்துவமனையில் சேர்க்கலாம் என திட்டமிட்டிருந்தார். மாரிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ராஜா, மனைவியை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்சை அழைத்தார். டிரைவர் சந்திரசேகர், உதவியாளர் சுந்தர்ராஜன் குழுவினர் தெருவுக்குள் சென்று மாரி அவரது தாயார் மற்றும் ராஜா ஆகியோரை அழைத்து வந்தனர். கர்ப்பிணி மாரி வயிற்றுவலியால் பிரசவ வலியால் துடித்தார். தாய்க்கு பனிக்குடம் உடைந்து நீர் வெளியேறியது.

குழந்தையின் தலை வெளியே வர துவங்கிவிட்டது. திருநெல்வேலி ஜங்ஷன் ஸ்ரீபுரம் பகுதியில் வந்த போது, திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு குண்டு, குழியுமான சாலையில் போக்குவரத்து நெரிசலில் கொண்டு செல்வது அத்தனை பாதுகாப்பான விஷயம் இல்லை என்பதால் ஆம்புலன்சை ரோட்டு ஓரமாக நிறுத்தினார் டிரைவர் சந்திரசேகர். உதவியாளர் சுந்தர்ராஜன், மாரியின் தாயார் உதவியுடன் ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர். மாரிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

பிரசவத்தின் போது தாயை பாதுகாக்கும் நடவடிக்கை, பச்சிளம் குழந்தையை சுத்தம் செய்து பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பின்னர் திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனை பிரசவ வார்டில் அனுமதித்தனர். ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே சுகப் பிரசவம் நடந்ததால் டாக்டர்கள், நர்ஸ்களும், டிரைவர் மற்றும் உதவியாளரை பாராட்டினர். அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தால் கூட சிசேரியன் எனும் ஆபரேஷன் தான் நடத்தி இருப்பார்கள். குண்டும் குழியுமான ரோட்டினை பராமரிக்காமல் விட்டுள்ள திருநெல்வேலி மாநகராட்சியை தான் உண்மையில் பாராட்ட வேண்டும் என்றார்கள் மக்கள் கிண்டலாக.

Updated On: 29 April 2022 3:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  4. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  5. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  6. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  7. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  8. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  9. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  10. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!