/* */

அருகன்குளம் காட்டு ராமர் கோவிலில் ஸ்ரீராமநவமி வெகு விமரிசையாக கொண்டாட்டம்

அருகன்குளம் காட்டு ராமர் கோவிலில் ஸ்ரீராமநவமி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

அருகன்குளம் காட்டு ராமர் கோவிலில் ஸ்ரீராமநவமி வெகு விமரிசையாக கொண்டாட்டம்
X

நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருகன்குளம் காட்டு ராமர் கோவில் ஸ்ரீராமநவமி வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி நதிக்கரையில் அருகன்குளம் என்ற இடத்தில் காட்டுராமர் ஆலயம் அமைந்துள்ளது. இந்தக் கோயிலைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, காட்டுப் பகுதியில் இருப்பதால் இப்படியொரு திருப்பெயர் வந்திருக்கலாம் என்றே எண்ணத் தோன்றும்.

ஏனெனில், அமைதியான வனச் சூழலிலேயே இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. ஸ்ரீ சீதாபிராட்டியாா் ஸ்ரீராமா் தம்பி பரதனுடன் இங்கு அருள்பாலிக்கின்றாா். தோஷங்களாலும், கல்யாணத் தடையாலும் வருந்தும் அன்பர்கள் இங்கு வந்து வழிபட்டால் விரைவில் அவர்களுக்குக் கல்யாண வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஸ்ரீ காட்டுராமர் ஆலயத்தில் சந்நிதிக்கு எதிரில் அபூர்வக் கோலத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் கைகூப்பியபடி அனுதினமும் ஸ்ரீராம பிரானைத் தரிசித்து கொண்டிருக்கும் திருக்கோலம்.

இத்தகைய சிறப்பு மிக்க காட்டு ராமர் கோவிலில் இன்று ஸ்ரீராமநவமி வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக காலையில் கலசங்கள் கொண்டு பூஜைகள் செய்யப்பட்டு மஹா ஹோமமும், தொடா்ந்து பூா்ணாகுதியும் நடைபெற்றது. பின்னா் மூலவருக்கு அபிஷேகமும், சிறப்பு அலங்காரம் செய்ப்பட்டது. அதனை தொடா்ந்து உற்சவா் ஸ்ரீராமா் சீதாபிராட்டி சமேத லெட்சுமணா் மற்றும் ஆஞ்சனேயனுக்கு மஞ்சள்பொடி, வாசனைபொடி, மாபொடி, பால், தயிா், பஞ்சாமிருதம், சந்தணம் போன்ற நறுமண திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

நிறைவாக கலசங்கள் ஆலய பிரதஷணமாக கொண்டு வரப்பட்டு தாரை அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சிறப்பு அலங்காரம் நடைபெற்று கோபுர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. திரளான பக்தா்கள் இதில் கலந்து கொண்டு ராமா் அருள்பெற்று சென்றனா்.

Updated On: 10 April 2022 11:14 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலம் யார் தெரியுமா..?
  2. கல்வி
    பூமியின் முதல் செல் எப்படித் தோன்றியது..? இந்திய விஞ்ஞானிகள்...
  3. நாமக்கல்
    எருமப்பட்டியில் நாளை, நாமக்கல்லில் 20ம் தேதி மின்சார நிறுத்தம்...
  4. நாமக்கல்
    கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ் பர்மிட்டை ஏன் ரத்து...
  5. சுற்றுலா
    ஜாலியா ஒரு டூர் போவோமா..? மனசு லேசாகும்ங்க..!
  6. கல்வி
    விமானி பயிற்சி பள்ளியை அமைக்கும் ஏர் இந்தியா
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வருமானத்தை எவ்வாறு அதிகரிப்பது?
  8. சினிமா
    அன்பு, ஆனந்தி காதல்...! இனி இப்படித்தான் போகப்போகுதா?
  9. உலகம்
    அமெரிக்காவில் கொடி கட்டிப்பறக்கும் இந்தியர்கள்..!
  10. தமிழ்நாடு
    மொட்டைக்கடிதம் எழுதிய போலீஸ்..! 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பணி..!