/* */

நெல்லை கால்நடை மருத்துவ கல்லூரியில் ரூ.13 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள் கட்டும் பணிக்கான பூமிபூஜை

நெல்லை கால்நடை மருத்துவக் கல்லூரியில் ரூ.13 கோடியில் வகுப்பறை, விடுதி கட்டட பணிக்கான பூமி பூஜையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

நெல்லை கால்நடை மருத்துவ கல்லூரியில் ரூ.13 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள் கட்டும் பணிக்கான பூமிபூஜை
X


நெல்லை மாவட்டம், ராமையன்பட்டி அருகே உள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 13 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் மாணவர்களுக்கான விடுதிக் கட்டிடங்கள் கட்டும் பணிக்கான பூமி பூஜையை, மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரியில் மாணவர்களுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் விடுதிக்கான கூடுதல் கட்டிடங்கள் 13 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளது. சேலம் மாவட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை அறிவியல் கூடங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக கால்நடை மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிக்கப்படும். கால்நடை துறையில் காலிப்பணி இடங்கள் எங்கெங்கு உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் காலியிடங்கள் நிரப்பப்படும். ஆடுகளுக்கு ஆட்டம்மை நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர்ஞானதிரவியம், சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் நெல்லை தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தனது தொகுதிக்குட்பட்ட பள்ளமடை பகுதியில் புதிதாக கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை அமைச்சரிடம் வழங்கினார்.

Updated On: 10 July 2021 4:04 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்
  2. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்
  3. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. ஈரோடு
    கடம்பூர் வனத்தில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்ற பெண் யானை...
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டிய கோடை மழை: ஒரே நாளில் 94.3 மி.மீ பதிவு
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்