/* */

மகளிர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

மகளிர் தினம் முன்னிட்டு விமன் இந்தியா மூவ்மென்ட் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

மகளிர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

விமன் இந்தியா மூவ்மென்ட் நெல்லை மாநகர் மாவட்டம் சார்பாக மேலப்பாளையத்தில், பெண்களின் வலிமையே தேசத்தின் வலிமை என்ற தலைப்பில் மகளிர் தினம் முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தலைவி ரினோஷா தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவி நூர் நிஷா வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.எ.பாத்திமா முன்னிலை வகித்தனர்.

புறநகர் மாவட்ட பொதுச் செயலாளர் நுஸ்ரத் சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில், வருடம்தோறும் மார்ச் 8-ம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அரசியல், சமூகசெயல்பாடுகள், பொழுதுபோக்கு, விளையாட்டு, தொழில்துறை என சகல துறைகளிலும் இன்று பெண்கள் இல்லாத இடங்களே இல்லை. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வது வெறும் பழமொழிக்காக மட்டும்மல்ல. ஆண்கள் துவண்டு போகும் நேரங்களில் தாங்கி பிடித்து நேர்மறை எண்ணங்களை ஆண்கள் மனதில் விதைத்து மீண்டும் வாழ்க்கை என்னும் பந்தயத்தில் முன்பை விட பலமடங்கு வேகத்தில் ஓட வைப்பதில் பெண்களின் பங்கு அதிகம் என உரையாற்றினார். இறுதியாக மாவட்ட நிர்வாகி பாத்திமா நன்றி உரை ஆற்றினார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 7 March 2021 2:55 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  6. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  7. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  8. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  9. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி