/* */

தூத்துக்குடியில் செல்போன் பறிப்பு வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

தூத்துக்குடியில் செல்போன் பறிப்பு வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் செல்போன் பறிப்பு வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
X

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து வழிப்பறி, நகைப்பறிப்பு, கொலை, கொலை முயற்சி, புகையிலைப் பொருட்கள் கடத்தல், கஞ்சா பதுக்கி வைத்தல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த 19.01.2023 அன்று தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூபாண்டியபுரம் பகுதியில் தூத்துக்குடி வடக்கு சோட்டையன்தோப்பு பகுதியைச் சேர்ந்த ரத்தினம் (65) என்பவர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, அந்த ஆட்டோவின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் திடீரென ரத்தினத்திடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போனை பறித்துச் சென்றனராம். இந்த வழக்கில் தூத்துக்குடி புதிய முனியசாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான அந்தோணி சூர்யா (22) மற்றும் சக்திகுமார் (19) ஆகிய இருவரையும் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

செல்போன் பறிப்பு வழக்கில் கைதான அந்தோணி சூர்யா மற்றும் சக்திகுமார் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில், தூத்துக்குடி புதிய முனியசாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான அந்தோணி சூர்யா மற்றும் சக்திகுமார் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Updated On: 15 Feb 2023 12:19 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  4. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  5. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  6. வீடியோ
    🔴LIVE :கொல்கத்தாவில் நிர்மலா சீதாராமனின் அனல் பறக்கும் உரை ||...
  7. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    சவுக்கு சங்கரிடம் ஒரு நாள் விசாரணை நடத்த திருச்சி போலீசுக்கு கோர்ட்...
  9. அண்ணா நகர்
    250 வார்டுகளாக மேலும் விரிவடைகிறது பெருநகர சென்னை மாநகராட்சி எல்லை
  10. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!