/* */

தூத்துக்குடி மாவட்ட மீனவர்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து நடவடிக்கை: ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்ட மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்ட மீனவர்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து நடவடிக்கை: ஆட்சியர்
X

மீனவப் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்களின் குறைகளை கேட்டறியும் வகையில் மாதம்தோறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டம் நீண்ட நாள்களாக நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மீனவர் மாதாந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட கீழவைப்பார், சிப்பிகுளம், தருவைக்குளம், வெள்ளப்பட்டி, மேட்டுப்பட்டி, திரேஸ்வரம், தூத்துக்குடி மீன் பிடி துறைமுகம், இனிகோ நகர், மீனவர்காலனி, இரட்சணையாபுரம், பழையகாயல், புன்னக்காயல், மணப்பாடு, பெரியதாழை, ஆலந்தலை, அமலிநகர், கல்லாமொழி, ஜீவாநகர், சிங்கித்துறை என 25 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர்.

கூட்டத்தின்போது, கடற்கரை ஒழுங்காற்று மண்டல பாதுகாப்பு சட்டம் செயல்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும், பெரியதாழை மற்றும் அமலிநகரில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும், கடற்கரை கிராமங்களில் அடிப்படை வசதிகள், மீன்பிடி வலைகளுக்கு மானியம், இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகு நேரங்களை (காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை) கண்டிப்பாக அமல்படுத்துதல் வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், 5 கடல் மைலுக்கு அப்பால் இயந்திரமயமாக்கப்பட்ட படகுகள் மீன்பிடிப்பதை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். புன்னக்காயல் மீனவர்களுக்கு சாலை வசதி, வெள்ளப்பட்டி மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் அருகில் உள்ள தாளமுத்துநகர் சிலுவைப்பட்டி மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் தள்ளு மடியில் தொழில் செய்வதை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதுதவிர, எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட இலங்கை படகுகளையும் அதில் உள்ள மீனவர்களையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும், தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்தில் பணிபுரியும் மீனவர்களுக்கு அவசர காலங்களில் கடல் மேல் ஏற்படும் அசாதாரண சூழ்நிலைக்கு துறைமுகத்தில் அரசு சார்பாக ஆம்புலன்ஸ் வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், தொழிலாளர் தங்குவதற்கு துறைமுகத்திற்கு ஓய்வு அறை கட்டித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மீனவர்களின் கோரிக்கைகள் சம்பந்தமாக துரித நடவடிக்கை எடுப்பதாக மீனவர்களிடம் தெரிவித்தார்.

கூட்டத்தின்போது, மீனவர்களுக்கும், மீனவப் பெண்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ் குமார், தூத்துக்குடி மீன்வளத்துறை இணை இயக்குநர் அமல் சேவியர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் விஜயராகவன், மீன்பிடித்துறைமுக மேலாண்மை உதவி இயக்குநர் அன்றோ பிரின்ஸி வைலா, தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Nov 2022 12:47 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  4. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  6. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  7. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...