/* */

தூத்துக்குடியில் அக்.8ல் ஆன்லைன் மூலம் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்

தூத்துக்குடியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துவங்க ஒரு நாள் பயிற்சி முகாம் ஆன்லைன் மூலம் அக். 8ம் தேதி நடக்கிறது.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் அக்.8ல் ஆன்லைன் மூலம் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்
X

தூத்துக்குடி மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துவங்க ஒரு நாள் பயிற்சி முகாம் ஆன்லைன் மூலம் வருகிற அக்டோபர் 8ம் தேதி நடக்கிறது.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் சங்கத்தின் பொதுசெயலாளர் ராஜ்செல்வின் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்த பல திட்டங்களை அறிவித்துள்ளார்கள். மானியங்களுடன் கூடிய கடன் உதவி, ஈடு உத்திரவாத நிதியம் மற்றும் முயற்சி மூலதன நிதியம் போன்ற திட்டங்கள் அரசின் கொள்கையளவில் வடிவு பெற்றுள்ளன.

இதன் ஒரு பகுதியாக சிறந்த தொழில்முனைவோர்களை கண்டறிய சென்னையிலுள்ள தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமும், மாவட்ட தொழில் மையம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் சங்கத்துடன் (துடிசியா) இணைந்து 08.10.2021 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை ஆன்லைன் மூலம் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், பணியில் உள்ள தொழில் ஆர்வமுள்ள திறனாளிகள், தொழில் பயிற்சி பெற்ற ஆண் பெண் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.

முதற்கட்டமாக சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தெரிவு செய்வது எப்படி, தொழில் துவங்கவிருக்கும் முனைவோர்க்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி இம்முகாமில் விவரிக்கப்படும். பயிற்சிமுகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அடுத்த கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவர்.

அடுத்த கட்டமாக திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி, தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கு நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும். தகுதி உள்ளவர்கள் அரசு வழங்கும் மானிய திட்டங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அதன்மூலம் நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும். திட்டங்கள் மூலம் நிதி உதவி பெறும் 'தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியாளர்' திட்டங்களில் குறிப்பிட்டுள்ள கட்டாய பயிற்சியிலிருந்து விலக்கு பெறலாம்.

இப்பயிற்சிகளில் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் மாவட்ட தொழில் மையங்களும் இணைந்து செயல்படும். எனவே, அரசு திட்டங்கள் பற்றிய விளக்கங்களும் அதன் மூலம் பயன்பெறும் வழிவகைகளும் ஏற்படுத்தி தரப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் தூத்துக்குடி துடிசியா அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தோறும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை புதிய தொழில், சேவை, வியாபாரம் தொடங்க விருப்பம் உள்ளவர்களுக்கு இலவச ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு : தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் சங்கம் (துடிசியா) 97914-23277 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 1 Oct 2021 2:19 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  4. வீடியோ
    மேடையிலேயே Cool Suresh செய்த சேட்டை அதிர்ச்சியில் உறைந்த நடிகைகள்...
  5. வீடியோ
    🔴LIVE :இளைஞர்களின் உணர்வுகளையும்,தியாகத்தையும் சீமான் வியாபாரம்...
  6. வீடியோ
    கதாநாயகி இல்லாத குறையை தீர்த்த Cool Suresh ! #coolsuresh...
  7. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  8. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  9. ஈரோடு
    புஞ்சை புளியம்பட்டி அருகே அரசு பேருந்தின் மீது கல்வீசி கண்ணாடியை...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு