/* */

தை அமாவாசை- தூத்துக்குடியில் பொதுமக்கள் தர்ப்பணம்

தை அமாவாசை- தூத்துக்குடியில் பொதுமக்கள் தர்ப்பணம்
X

தை அமாவாசையை முன்னிட்டு, தூத்துக்குடி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

இந்துக்கள் வழிபாட்டு முறையில், ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும் ஆடி, தை அமாவாசைகள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆடி மற்றும் தை அமாவாசைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால் முன்னேற்றம் தரும் என்று கூறப்படுகிறது.இத்தகைய சிறப்பு வாய்ந்த தை அமாவாசை தினமான இன்று காலையில் தூத்துக்குடி துறைமுக கடற்கரையில் ஏராளமானோர் கடலில் புனித நீராடினர். அங்கு தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பூஜைகள் நடத்தி வழிபட்டனர். இதே போன்று மாவட்டத்திலுள்ள கடலோரங்களிலும், ஆற்றங்கரையிலும் பல்வேறு இடங்களில் தர்ப்பணம் நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

Updated On: 11 Feb 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  2. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  4. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  5. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  8. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  9. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  10. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...