/* */

போதை பொருள் விற்றால் நடவடிக்கை - தூத்துக்குடி எஸ்.பி

போதை பொருள் விற்றால் நடவடிக்கை - தூத்துக்குடி எஸ்.பி
X

போதைப்பொருள் யார் விற்றாலும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., ஜெயக்குமார் கூறினார்.

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் தொடக்க நிகழ்ச்சி தென்பாகம் காவல் நிலையத்தில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி., ஜெயக்குமார் கலந்து கொண்டு சிசிடிவி கேமராக்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பகுதிகள், முக்கிய சந்திப்புகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். கஞ்சா விற்பனை செய்ததாக 10 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். கஞ்சா விற்பனை அதிகம் உள்ள இடங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். போதைப்பொருள் விற்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Updated On: 30 Jan 2021 10:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  5. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  7. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  9. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!