/* */

திருவாரூரில் ஓட்டுக்கு பணம் வழங்க வைத்திருந்த ரூ.45,300 பறிமுதல்

திருவாரூரில் ஓட்டுக்காக தி.மு.க.வினர் பணம் வழங்க முயன்ற போது கண்டு பிடித்து ரூ.45,300 பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

திருவாரூரில் ஓட்டுக்கு பணம் வழங்க வைத்திருந்த ரூ.45,300  பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட பணம் திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

திருவாரூர் நகராட்சி 5வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க. சார்பில் செல்வி வணங்காமுடி என்ற வேட்பாளர் போட்டியிடுகின்றார் .இந்நிலையில் அவருக்கு வாக்களிப்பதற்காக ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட கேக்கரை, கொடிக்கால்பாளையம்,சூபி நகர் ஆகிய பகுதிகளில் இன்றைய தினம் தி.மு.க.வினர் ஓட்டுக்காக பணம் பட்டுவாடாவில் ஈடுபட முயன்றுள்ளதாக தெரிகிறது.

இதை கண்ட மனிதநேய மக்கள் கட்சியினர் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதில் 4 பேர் தப்பி விட இரண்டு பேரை மடக்கி பிடித்தனர், அவர்களிடமிருந்து 45, 300 ரூபாய் கைப்பற்றினர். இச்சம்பவம் குறித்து அறிந்த தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பணத்தை கைப்பற்றி மற்றும் இதில் ஈடுபட்ட இருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

தற்போது கைப்பற்றப்பட்ட பணமும் சம்பவத்தில் ஈடுபட்ட மாரியப்பன் மற்றும் மனோகரன் ஆகிய இருவரும் நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலரும் நகராட்சி ஆணையருமான பிரபாகரன் முதல்கட்ட விசாரணையை துவக்கி உள்ளார்.

Updated On: 17 Feb 2022 1:43 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  3. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  4. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  5. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  6. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  7. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை