/* */

திருவாரூரில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.33 லட்சம் பறிமுதல்

திருவாரூரில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.33 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

திருவாரூரில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.33 லட்சம் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட பணம்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் யாரும் உரிய ஆவணமின்றி ரூ.50000 க்கு மேல் எடுத்து செல்ல கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனை கண்கானிக்க மாவட்டம் தோறும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் அருகே திருவாரூர் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சீனிவாசபுரம் என்ற இடத்தில் தாசில்தார் ராஜ ராஜேந்திரன் தலையிலான பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த காரை சோதனையிட்டதில் அதில் பயணம் செய்த நாகப்பட்டினம் மாவட்டம் கீவளூர் பகுதியை சேர்ந்த ரஞ்சன் என்பவர் உரிய ஆவணமின்றி இந்திய நாட்டு பணம் ரூ. 63000 மற்றும் மலேசிய நாட்டு கரன்சி இந்திய மதிப்பில் 1.70லட்சம் ரூபாய் ஆக மொத்தம் 2.33 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து நகர்புற தேர்தல் நடத்தும் அலுவலர் நகராட்சி ஆணையர் பிரபாகரனிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 3 Feb 2022 4:05 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  2. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  3. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  4. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  6. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...
  7. ஆன்மீகம்
    புனிதமான வாழ்க்கையை கொண்டாடும் சந்தோஷமான ரமலான் தின வாழ்த்துகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. ஈரோடு
    ஈரோடு மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர்...
  10. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க