/* */

தொடர் மழையால் 20 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை

திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 20000 ஏக்கர் பரப்பளவிலான சம்பா பயிர்கள் சேதம், விவசாயிகள் வேதனை

HIGHLIGHTS

தொடர் மழையால் 20 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை
X

திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கடந்த இரண்டு தினங்களாக திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

நேற்றைய தினத்தை பொருத்த மட்டிலும் திருத்துறைப்பூண்டியில் 11 சென்டி மீட்டரும், முத்துப்பேட்டையில் அதிகபட்சமாக 19 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது .இதன் காரணமாக திருத்துறைப்பூண்டி வட்டத்துக்கு உட்பட்ட சாகுபடிப் பகுதிகளில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் மழையினால் பாதிக்கப்பட்டு சாய்ந்து உள்ளன. மேலும் மாவட்டம் முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பிலான சம்பா பயிர்கள் சேதமடைந்துள்ளதாக வேளாண் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் அறுவடை செய்துவிடலாம் என்று விவசாயிகள் எண்ணியிருந்த வேளையில் தற்போது பெய்த மழையின் காரணமாக நெற் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. விவசாயிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததே இதுபோன்ற சேதத்திற்கு காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Updated On: 2 Jan 2022 5:09 AM GMT

Related News