/* */

குழந்தை திருமணத்தைத் தடுக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

திருவாரூர் மாவட்டம்.

HIGHLIGHTS

குழந்தை திருமணத்தைத் தடுக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
X

குழந்தை திருமணத்தைத் தடுக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களில் 12 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

18 வயது பூர்த்தி அடையாத பெண் குழந்தைகளுக்கு திருணம் செய்வதால் கர்பப்பை முழு வளர்ச்சி அடையாத காரணத்தால் அடிக்கடி கருச்சிதைவு ஏற்படவும், எடைகுறைவான குழந்தைகள் பிறக்கவும் தாய்சேய் மரணம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

அதுமட்டுமல்லாமல் இரத்த சோகை, உடல் மற்றும் மனம் பாதிப்பு அடைவதால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக படிக்கும் பருவத்தில் திருமணம் செய்வதால் கல்வி அறிவு தடைபட்டு, தன்னம்பிக்கை குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும், சரியான முதிர்ச்சி இல்லாத காரணத்தினால் பாலியல் ரீதியான பிரச்சனைகள், அடிக்கடி கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனைகள் ஏற்பட்டு தற்கொலை செய்யும் நிலை ஏற்படுகிறது. கணவன் மனைவிக்கிடையே வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதால், கணவனை இழந்து இளம் வயதிலேயே விதவைகள் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

குழந்தைத் திருமண தடைச்சட்டம் - 2006 ன்படி குழந்தை திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். இக்குற்றம் புரிந்தவர்களுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது ரூபாய் 1 இலட்சம் அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டும் உண்டு.

18 வயது நிறைவடையாத பெண் குழந்தையை திருமணம் செய்து கொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர் குற்றவாளி ஆவார். அது போல 21 வயது நிறைவடையாத ஆணுக்கோ திருமணம் செய்யும் பெண்ணும் குற்றவாளி ஆவார்.

அதுமட்டுமல்லாமல் குழந்தை திருமணத்தை நடத்தியவர் மற்றும் குழந்தை திருமணம் நடத்த தூண்டியவர் குழந்தை திருமணத்தில் கலந்து கொண்டவர்கள், அச்சக உரிமையாளர், மந்திரம் ஓதுபவர், மண்டப உரிமையாளர் உட்பட அனைவரும் குற்றவாளிகள் ஆவர். எடுத்துக்காட்டாக திருமண பத்திரிக்கை அச்சடிக்கும் அச்சக உரிமையாளர் வயது சான்றை சரிபார்த்து அச்சடிக்க வேண்டும் (18 வயது அம் மணமகளுக்கு நிறைவடைந்துள்ளதா என்றும் மணமகனுக்கு 21 வயது நிறைவடைந்துள்ளதா எனவும் சரிபார்த்தல் முக்கியமாகும்)

எனவே, திருவாரூர் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை தடுத்திடும் வகையில் பொதுமக்கள் அச்சமின்றி தகவல் தெரிவிக்க ஏதுவாக சைல்டு லைன் இலவச அழைப்பு எண் 1098, மாவட்ட சமூக நல அலுவலரின் கைபேசி எண் - 9750570683 மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரின் கைபேசி எண் - 9345560539 அல்லது 100 என்ற காவல் துறை எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

"குழந்தை திருமணம் இல்லா மாவட்டமாக திருவாரூர் மாவட்டம் உள்ளது என்பதை அனைவரும் மனதார உறுதிமொழி ஏற்போம்" என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் .வே.சாந்தா, தெரிவித்தார்.

Updated On: 12 May 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  2. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  5. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  6. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  7. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  9. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?