/* */

கேரளாவின் அரிசி கிண்ணம் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?

Kerala Matta Rice -கேரளாவில் லட்சக்கணக்கான ஹெக்டேர்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது

HIGHLIGHTS

கேரளாவின் அரிசி கிண்ணம் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?
X

பைல் படம்

Kerala Matta Rice -அங்குள்ள பாலக்காடு, ஆலப்புழா குட்டநாடு பகுதிகளில் தான் நெல் விளைச்சல் அதிகம் உள்ளது. இதில் பாலக்காடு அரிசிக் கிண்ணம் என்றே அழைக்கப்படுகிறது. பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா அணை நீர் தான், அந்த மாவட்டத்தின் நெல் சாகுபடிக்கான ஜீவனாடியாக உள்ளது.

சித்தூர், அட்டப்பாடி பகுதிகளில் நெல் வயல்கள் அதிகம் உள்ளன. அதுபோல திருச்சூர் மாவட்டம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி, கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள மேப்பையார், வயநாடு மாவட்டத்தில் உள்ள கபினி ஏரியா, ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள குட்டநாட்டின் காயல் பகுதிகளில் நெல் விளைச்சல் அதிகம் உள்ளது.நெல் வயல்கள் மேற்கண்ட இடங்களிலெல்லாம் இருந்தாலும், பெரிய அளவிற்கான அரிசி ஆலைகள் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள காலடி மற்றும் பெரும்பாவூரில் தான் அதிகம் உள்ளன.எப்படியாவது அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்று விட வேண்டும் என்று கேரளா தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால் முடியவில்லை. 1974-75 காலகட்டங்களில் கேரளாவில் 8.82 லட்சம் ஹெக்டேர் பரப்பில் நெல் உற்பத்தி இருந்தது.

தற்போது அதாவது 2018-19 ல் வெறும் 2.03 லட்சம் ஹெக்டேராக சுருங்கி இருக்கிறது. கேரள விவசாயத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி. 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்திற்கு பிறகு, நெல் சாகுபடி பரப்பு கூடி இருக்கிறது என்பதாகும். ஆனால் புள்ளி விவரங்கள் வேறொன்றை உறுதிப்படுத்துகிறது.கடந்த 2005-06 காலகட்டங்களில் 2,75,742 ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி நடந்தது. அப்போது 6 லட்சத்து 29 ஆயிரத்து 987 டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் கடந்த 2019-20ம் ஆண்டில் 1 லட்சத்து 91 ஆயிரத்து 051 ஹெக்டேரில் சாகுபடி நடந்தது. மொத்தம் 5 லட்சத்து 87 ஆயிரத்து 078 டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது. ஆக இப்படியாக படிப்படியாக நெல் சாகுபடி பரப்பு கேரளாவில் குறைந்து வருகிறது.

2005-06 முதல் 2020-21 வரை மொத்த சாகுபடி நிலத்தில் 30.71 விழுக்காடு குறைந்திருக்கிறது. உற்பத்தியும் 6.84 விழுக்காடு சரிந்திருக்கிறது. சாகுபடி பரப்பிலும் 84 ஆயிரத்து 692 ஹெக்டேர் குறைந்து, உற்பத்தியிலும் 43 ஆயிரத்து 089 டன் குறைவு ஏற்பட்டிருக்கிறது.இத்தனைக்கும் 2021- 22 பட்ஜெட்டின் படி,2.05 ஹெக்டேரில் நெல் விவசாயம் செய்யும் நில உரிமையாளர்களுக்கு, ஹெக்டேர் ஒன்றுக்கு 2,000 ரூபாய் ராயல்டி கொடுத்து அரசு ஊக்குவித்தது. ஆனாலும் விவசாயிகள் மத்தியில் நெல் உற்பத்தி குறித்த புரிந்துணர்வு குறைந்து கொண்டே வருகிறது.

விவசாயத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக கேரளாவை மாற்ற வேண்டும் என்கிற அதனுடைய கனவு ,1980 ஆம் ஆண்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் புதுவயல், காரைக்குடி பகுதியில் இருந்து அபரிமிதமாக அரிசியை இறக்குமதி செய்யும் கேரளா, தன் மொத்த அரிசி தேவையில் 11 விழுக்காட்டை இங்கிருந்துதான் பெறுகிறது.மொத்த தமிழகத்திலிருந்தும் 28 முதல் 32 விழுக்காடு வரை, கேரள மாநிலத்தின் அரிசித் தேவையை பூர்த்தி செய்து வருகிறோம். கர்நாடக மாநிலத்தில் இருந்து காசர்கோடு வழியாக 12 விழுக்காடு அரிசியை இறக்குமதி செய்யும் கேரளா, ஆந்திராவிலிருந்தும் கணிசமாக அரிசியை இறக்குமதி செய்கிறது.

ஆக மொத்த தேவையில் பகுதி அரிசியை தான் கேரளாவால் தற்போது உற்பத்தி செய்ய முடிகிறது. இதிலும் பற்றாக்குறை நிலவுவதால், அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து, தொடர்ந்து கூட்டங்களை போட்டு வருகிறார் கேரள மாநில விவசாயத்துறை அமைச்சர் பி.பிரசாத்.

கடந்த 2011 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையை மையப்படுத்தி எழுந்த பிரச்சனையின் போது, தமிழகத்திற்கும்- கேரளத்திற்குமிடையிலான அத்தனை வழிகளையும் தமிழகம் பூட்டியதால் கேரளாவில் பெரிய அளவிற்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. உணவு விநியோகத்தில் ஏற்பட்ட பெருஞ்சுணக்கத்தால், கேரள அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது... அப்போது முதல் தற்போது வரை பெரும் முயற்சிகள் செய்தாலும், கேரளா நெல் விளைச்சலில் பின்னடைவினையே சந்தித்து வருகிறது. தகவல் உதவி: ச.அன்வர் பாலசிங்கம், ஒருங்கிணைப்பாளர், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 7 Oct 2022 8:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?