/* */

வராகநதியில் வெள்ளப்பெருக்கு பெரியகுளம் மக்களுக்கு எச்சரிக்கை

கொடைக்கானல் மலையடிவாரப்பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பெரியகுளம் வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வராகநதியில் வெள்ளப்பெருக்கு  பெரியகுளம் மக்களுக்கு எச்சரிக்கை
X

பெரியகுளம் நகரின் மையத்தில் செல்லும் வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பெரியகுளம் வராகநதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கொடைக்கானல் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பெரியகுளம் நகராட்சி. இங்கு பெய்து வரும் பலத்த மழையால் சோத்துப்பாறை அணை நிறைந்து விநாடிக்கு தொள்ளாயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இதர பகுதிகளில் இருந்து வரும் மழை நீரும் சேர்ந்து வராகநதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் குளிக்கவோ, துணிகளை துவைக்கவோ இதர பயன்பாட்டிற்காகவே ஆற்றுக்குள் எக்காரணம் கொண்டும் இறங்க வேண்டாம். வெள்ளம் வடியும் வரை மக்கள் பாதுகாப்பான வாழ்வியல்முறைகளை மேற்கொள்ள வேண்டும் என வருவாய்த்துறை சார்பில் தண்டோரா மற்றும் வாகன ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Updated On: 17 Nov 2021 2:43 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  5. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  6. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  9. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  10. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்