/* */

டிஎன்பிஎஸ்சி தேர்வு விடைத்தாள்: இன்று இரவுக்குள் சென்னைக்கு எடுத்து செல்லப்படும்

தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் 79 தேர்வு மையங்களில் 32 ஆயிரத்து 323 பேர் ஒருங்கிணைந்த புள்ளியியல் துறை தேர்வு நடந்தது

HIGHLIGHTS

டிஎன்பிஎஸ்சி  தேர்வு விடைத்தாள்: இன்று இரவுக்குள் சென்னைக்கு  எடுத்து செல்லப்படும்
X

டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் தஞ்சையில் நடைபெற்று வரும் புள்ளியில் துறைக்கான காலி பணியிடங்களுக்கு நடைபெற்று வரும் தேர்வினை ஆய்வு செய்தார்

தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்கள் இன்று இரவுக்குள் அல்லது நாளை அதிகாலைகுள் சென்னை கொண்டு வரப்படும். ஜிபிஎஸ், கேமிரா கொண்டு பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படும். இதில் எதாவது சேதங்கள் இருந்தால் உரிய விசாரணை செய்த பிறகே மதிப்பீடு செய்யயப்படும் என தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் தகவல்.

தஞ்சையில் நடைபெற்று வரும் புள்ளியில் துறைக்கான காலி பணியிடங்களுக்கு நடைபெற்று வரும் தேர்வினை டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் 79 தேர்வு மையங்களில் 32 ஆயிரத்து 323 பேர் ஒருங்கிணைந்த புள்ளியியல் துறை காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் தேர்வு நடைபெற்று வருகிறது. காலை மாலை என இரு பிரிவுகளாக தேர்வுகள் மாணவர்கள் நலன் கருதி நடத்தப்பட்டு வருகிறது.

இன்று இரவோ அல்லது நாளை அதிகாலையோ அனைத்து விடைத்தாள்களும் சென்னை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விடை தாள்கள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாகனத்தில் எடுத்துச் செல்லும் போதும், ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்ட வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்படும். தேர்வு எழுத வரும் மாணவர்களின் உடல் வெப்பநிலை அதிக அளவு இருக்குமேயானால் அந்த மாணவர்கள் தனி அறையில் வைத்து தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே திட்டமிட்ட தேர்வு என்பதால் பழைய முறைப்படி தான் தேர்வு நடைபெற்று வருவதாவும் அவர் தெரிவித்தார்.

Updated On: 11 Jan 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  2. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  4. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  7. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  8. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்