/* */

தஞ்சை பெரியகோயில் சித்திரை தேரோட்டம்

தஞ்சை பெரியக் கோவில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் பக்தர்கள் தரிசனம் இல்லாமல் கோவில் பிரகாரத்திற்குள் எளிமையாக நடந்தது.

HIGHLIGHTS

தஞ்சை பெரியகோயில் சித்திரை தேரோட்டம்
X

தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டத்தில் சுவாமி பிரகார உலா நடைபெற்றது.

உலக பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரிய கோவில் சித்திரை பெருவிழா கடந்த 9ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 15 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைப்பெற்று வந்தன.

இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மத்திய தொல்லியல் துறை பராமரிப்பின் கீழ் உள்ள புராதான சின்னங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்படி புராதான சின்னமான தஞ்சை பெரியக் கோவில் மூடப்பட்டது.

இதனால் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. தேரோட்டம் நாளான இன்று பக்தர்கள் தரிசனம் இல்லாமல் கோவில் பிரகாரத்திற்குள் எளிமையாக சுவாமி பிரகார உலா நடைபெற்றது.

அஸ்திரதேவர், விநாயகர், வள்ளி தெய்வானை சமேதமாக சுப்ரமணியர், கமலாம்பாள் சமேதமாக தியாகராஜர். நீலோத்பாலாம்பாள் ஆகிய சுவாமிகள் தனி தனி சப்பரத்தில் எழுந்தருள மங்கள வாத்யங்கள் இசைக்க, ஒதுவார்கள் திருமுறை பாட, சிவாச்சாரியர்கள் மந்திரங்கள் ஒத பக்தர்கள் தரிசனம் இல்லாமல் கோவில் பணியாளர்கள் மற்றும் சிவாச்சாரியர்கள் மட்டுமே கலந்து கொள்ள எளிமையாக திருத்தேரோட்டம் நடைபெற்றது.

Updated On: 23 April 2021 11:51 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு