/* */

தஞ்சையில் வியாபாரிகள் சாலை மறியல் போராட்டம்

தஞ்சையில் மாலை நேர அங்காடியை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு.

HIGHLIGHTS

தஞ்சையில் வியாபாரிகள் சாலை மறியல் போராட்டம்
X

சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள்.

தஞ்சை திலகர் திடல் அருகே மாலை நேர அங்காடி உள்ளது. இங்கு 85க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அங்காடி திறக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மாநகராட்சி அதிகாரிகள் கடை வாடகை சரியாக செலுத்தாததாலும், வேறு கட்டிடம் கட்ட வேண்டி உள்ளதாலும் அங்காடியை இடிக்க முடிவு செய்துள்ளதாக கூறி நீங்கள் காலி செய்யுங்கள் என கூறியதாக தெரிகிறது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடையை இடிக்க கூடாது என்று கோஷமிட்டனர். மேலும் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தொழில் செய்து வரும் இந்த கட்டிடத்தை இடித்தால், வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும் எனவும் இந்த முடிவை கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து கோஷங்களை எழுப்பினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை எடுத்து தற்காலிகமாக போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

Updated On: 10 Jan 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  2. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  4. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  6. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  7. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...
  8. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  10. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு