/* */

தென்னக பண்பாட்டு மையத்தில் தேசிய நாட்டுப்புற கலை விழா: பழங்குடியினர் நடனம்

தஞ்சை தென்னகப்பண்பாட்டு மையத்தில் 450 நாட்டுப்புற கலைஞர்கள் பங்கு பெரும் கலை விழா தொடங்கியது

HIGHLIGHTS

தென்னக பண்பாட்டு மையத்தில் தேசிய நாட்டுப்புற கலை விழா: பழங்குடியினர் நடனம்
X

தஞ்சை தென்னகப்பண்பாட்டு மையத்தில் 450 நாட்டுப்புற கலைஞர்கள் பங்கு பெரும் கலை விழா தொடங்கியது.

தஞ்சை தென்னகப்பண்பாட்டு மையத்தில் மத்திய அரசின் கலாசாரத்துறை அமைச்சகம் சார்பில் ஆக்டேவ் என்கிற வடகிழக்கு மாநில கலைவிழா கடந்த 12-ந் தேதி தொடங்கி 15-ந்தேதியுடன் நிறைவடைந்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்து கொண்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

இந்த கலைவிழாவை தொடர்ந்து தேசிய நாட்டுப்புற மற்றும் பழங்குடியினர் நடனங்களின் கலைவிழா இன்று தொடங்கியது. இந்த கலைவிழா வருகிற 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு நாட்களும் 11 குழுவினர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. தமிழ்நாடு, ராஜஸ்தான், ஜம்முகாஷ்மீர், அரியானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகம், குஜராத், புதுச்சேரி, தெலுங்கானா, ஒடிசா, மத்தியபிரதேஷம், பஞ்சாப், உத்தரபிரதேசம், இமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 30 குழுக்களை சேர்ந்த 450 கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

முதல்நாளில் கேரளாவின் சிங்காரி மேளம் நடனத்துடன் கலை விழா தொடங்கி தமிழ்நாட்டை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்ற கரகாட்டம் மற்றும் காவடியாட்டம், ராஜஸ்தானின் ஜாக்ரி நடனமும், மராட்டியத்தின் லாவணியாட்டமும், ஜம்மு-காஷ்மீரின் சுர்மா நடனமும், மத்திய பிரதேசத்தின் பதாய் நடனமும், ஹரியானாவின் பாக் நடனமும், குஜராத்தின் டங்கி நடனமும், பஞ்சாபின் பங்காரா நடனமும் நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சியை திரளானோர் கண்டு ரசித்தனர்.

Updated On: 16 March 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  2. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...
  3. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  4. வீடியோ
    Savukku Shankar மீது கஞ்சா வழக்கு திமுக அரசின் கையாலாகாத்தனம்...
  5. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  10. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...