/* */

மேகதாது நோக்கி விவசாயிகள் பயணம்

மேகதாது நோக்கி விவசாயிகள் பயணம்
X

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு 9ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த கர்நாடக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட ஏராளமான விவசாயிகள் தஞ்சையிலிருந்து கர்நாடகம் நோக்கி புறப்பட்டனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் கர்நாடக அரசு அண்மையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்காக 9 ஆயிரம் கோடி நிதிஒதுக்கீடு செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு கர்நாடக சட்டமன்ற முடிவினை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பி.ஆர்.பாணாடியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் தஞ்சை இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் பேட்டி அளித்த பி.ஆர்.பாண்டியன்,உச்சநீதி மன்ற உத்தரவுகளை மீறி கர்நாடக அரசு அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. நிதியும் ஒதுக்கி விட்டது. தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் நடவடிக்கையை மத்தியஅரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி, மேகதாது பகுதியை முற்றுகையிடும் போராட்டத்தில் நாளை காலை ஈடுபடுவதற்காக வாகனங்கள் மூலம் இன்று புறப்படுகிறோம் என்றார். இதனையடுத்து ஏராளமான வாகனங்கள் மூலம் விவசாயிகள் கர்நாடகம் நோக்கி புறப்பட்டனர்.

Updated On: 28 March 2021 4:46 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?