/* */

இடதுசாரிகள் பொது மேடை சார்பில் மொழிப்போர் தியாகிகள் நாள் உறுதி ஏற்பு

தஞ்சையில் இன்று நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் நாளில் தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரத்தை உயர்த்தி பிடிப்போம் என உறுதி ஏற்பு

HIGHLIGHTS

இடதுசாரிகள்  பொது மேடை  சார்பில் மொழிப்போர் தியாகிகள் நாள் உறுதி ஏற்பு
X

இடதுசாரிகள் பொதுமடை சார்பில் தஞ்சையில் இன்று நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் நாளில் உறுதி ஏற்பு நிகழ்ச்சி

தஞ்சாவூர் இடதுசாரிகள் பொது மேடை சார்பில் இந்தி திணிப்புக்கு எதிராக உயர்நீத்த தமிழ்நாட்டின் மொழிப்போர் மறவர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் சாம்பான் தலைமை வகித்தார்.

நிகழ்வில், தமிழை, தமிழ் வழிக் கல்வியை அழிக்கின்ற இந்து மற்றும் சமஸ்கிருத மொழிகளை தமிழ்நாட்டில் இருந்து விரட்டி அடிப்போம், குழந்தைகள் முதல் கடைகள், சாலைகள் வரை தமிழில் பெயர் வைப்போம்,ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தமிழிலேயே படிப்போம், மருத்துவம் மற்றும் உயர் கல்வி பயில்வதற்கான நீட் உள்ளிட்ட உயர்கல்வி தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும், பொது பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவரப்பட வேண்டும், தமிழ்நாட்டின் ஆட்சி மொழி, அலுவல் மொழி, உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழி தமிழ் மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழ்நாட்டின் பண்பாட்டு, கலாசாரத்தை, தாய்மொழித் தமிழை உயர்த்தி பிடிப்போம் என்ற கொள்கைகளை நிறைவேற்ற பாடுபடுவோம் உறுதியேற்க்கப்பட்டது.

இதில், இடதுசாரிகள் பொதுமடை ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொருளாளர் என்.பாலசுப்பிர மணியன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வெ.சேவையா, ‌. தமிழ் தேச மக்கள் முன்னணி மாநகர செயலாளர் ஆலம்கான், அரசு போக்குவரத்து சங்க நிர்வாகிகள் எஸ்.தாமரைச் செல்வன், டி. தங்கராசு, டி.கஸ்தூரி, மின்வாரிய சம்மேளன துணைத் தலைவர் பொன். தங்கவேல், கட்டுமான சங்க நிர்வாகிகள் எஸ்.குணசேகரன், பி.செல்வம் நுகர் பொருள் வாணிபக் கழக நிர்வாகிகள் எஸ்.தியாகராஜன், நாடிமுத்து,பழைய பேருந்து நிலைய ஆட்டோ சங்க நிர்வாகிகள் எம்.சிவானந்தம்,. ஆர்.பழனி மாணிக்கம், விஜயகுமார்,சமூக ஆர்வலர்கள் விசிறி சாமியார் முருகன், கணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட வரலாறு...

இந்தி திணிப்பை எதிர்த்து, தமிழ் மொழியைக் காக்க உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தித் திணிப்புக்கு எதிராகத் தமிழ்நாட்டில் நடந்த 1965-ஆம் ஆண்டு மாபெரும் போராட்டம் வெடித்தது. பல உயிர்களை பலி கொண்ட அந்தப் போராட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி திமுக அரியணை ஏற இந்தப் போராட்டம் திருப்புமுனையாக அமைந்தது.

1965 ஜனவரி 25ஆம் தேதி திமுக சார்பில் துக்க நாளாக அறிவிக்கப்பட்டது. அன்று நடைபெற்ற போராட்டம் கடுமையாகத் தீவிரமடைந்தது. அடுத்தடுத்த நாட்களில் போராளிகள் மொழிக்காகத் தீக்குளித்து மாண்டனர். இந்த போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

மத்திய அரசு மொழித் திணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும்போதெல்லாம் மொழிப்போரே நினைவுகூரப்படுகிறது. குறிப்பாக, பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, பல்வேறு வடிவங்களில் மொழித் திணிப்பு முயற்சிகளில் ஈடுபடுவதை திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இப்படியான சூழலில் மொழிப்போர் ஈகியர்களின் தியாகத்தைப் போற்றுவதிலும், தமிழ் மொழியைக் காப்பதிலும் தமிழ்நாடு உறுதியாக இருக்கிறது.


Updated On: 25 Jan 2023 10:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  4. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  5. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  7. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  9. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  10. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?