/* */

இரண்டு நாள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று தஞ்சை வருகை

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகிறார்

HIGHLIGHTS

இரண்டு நாள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று தஞ்சை வருகை
X

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று(மார்ச்12) வருகிறார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூருக்கு இன்று மதியம் வருகிறார். தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில் மதிய உணவுக்கு பின்னர், முன்னாள் ராணுவத்தினர்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் தஞ்சாவூர் பெரிய கோயில் மற்றும் சரஸ்வதி மகால் நூலகத்தை பார்வையிடுகிறார். இரவு தஞ்சாவூரில் தங்குகிறார்.

தொடர்ந்து மறுநாள் 13-ம் தேதி காலை தஞ்சாவூரிலிருந்து கார் மூலம் கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி பாண்டுரங்கன் சமஸ்தான் கோயில் வளாகத்தில் நடைபெறும் விஸ்வ வித்யாலயா வேத பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தஞ்சாவூர் வந்து மதிய உணவுக்கு பின்னர், தென்னக பண்பாட்டு மையத்துக்கு சென்று, வடகிழக்கு மாநிலங்களின் கலைவிழாவான கைவிணைப் பொருட்காட்சி மற்றும் உணவுத் திருவிழாவில் பங்கேற்று பின்னர் மீண்டும் தஞ்சாவூரில் தங்கும் ஆளுநர், மறுநாள் 14-ம் தேதி காலை கார் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து விமானத்தில் சென்னை செல்கிறார்.

Updated On: 12 March 2022 12:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்