/* */

கன மழைக்கு வாய்ப்பு: 20 நாட்களாக அறுவடை நெல்லுடன் காத்திருக்கும் விவசாயிகள்

தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் மட்டும் சுமார் 25,000 நெல் மூட்டைகள் தேங்கிக்கிடக்கின்றன

HIGHLIGHTS

கன மழைக்கு வாய்ப்பு: 20 நாட்களாக அறுவடை  நெல்லுடன் காத்திருக்கும் விவசாயிகள்
X

தஞ்சாவூர்  மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில்  தேக்கம் அடைந்துள்ள ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள்

கன மழை அச்சுறுத்தல் உருவாகியுள்ள சூழவில் கடந்த இருபது நாட்களாக அறுவடை செய்த நெல்லுடன் காத்திருக்கும் விவசாயிகளை காப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்தாண்டு 10 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 3.5 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் பதிவு மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் காலதாமதம் ஏற்படுவதால் பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் மட்டும் சுமார் 25,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கியுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், அறுடை செய்து 20 நாட்களாக நெல் கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்த நெல்லுடன் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் காத்துகிடப்பதாகவும், இதனால் கூடுதல் செலவு ஏற்படுவதாக கூறுகின்றனர்.

தற்போது கொள்முதல் நிலையங்களில் 700 முதல் 800 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் எங்களுக்கு ஒரு நாளைக்கு 1500 முதல் 2,000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட வேண்டும். தற்போது ஆன்லைன் பதிவு முறையால் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவதால், பழைய முறைப்படி கொள்முதல் செய்ய வேண்டும், மேலும் 3ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளாதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 28 Feb 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!