/* */

இருளர் மற்றும் ஆதியன் குடி சமூக மக்களுக்கு சாதிச்சான்றிதழ் : ஆட்சியர் வழங்கல்

கடந்த 40 ஆண்டுகளாக தங்களுக்கு பழங்குடி இன சாதி சான்றிதழ் வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர்

HIGHLIGHTS

இருளர் மற்றும் ஆதியன் குடி சமூக மக்களுக்கு சாதிச்சான்றிதழ் : ஆட்சியர் வழங்கல்
X

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தம்பிக்கோட்டை வடகாடு இறால் பண்ணை செயல் பாடுகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

இருளர் மற்றும் ஆதியன் குடிசமூகமக்களுக்கு இதுவரை 250 குடும்பங்களுக்கு சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்டஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் .

தஞ்சாவூர் மாவட்டம்,திருவிடைமருதூர் வட்டம், மகாராஜபுரம் ஊராட்சியில் உள்ளபனங்குடம் கிராமத்தில் வசிக்கும் 31 குடும்பங்களைசேர்ந்த 105 இருளர் பழங்குடி இன சமூகத்தினர்களுக்கு சாதிசான்றிதழ்களை ஒவ்வொரு வீடாக சென்று மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று (26.10.2022) வழங்கிபே சியதாவது:-

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் பட்டுக்கோட்டை பகுதியில் ஆதியன்குடி என்ற பழங்குடி இன மக்களும் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக தங்களுக்கு பழங்குடி இன சாதிசான்றிதழ் வேண்டுமென கோரிக்கைகள் விடுத்து வந்த நிலையில், தற்போது தமிழகஅரசு இவர்களுக்கு பழங்குடி இன மக்களுக்கான சாதிசான்றிதழ்கள் வழங்கி வருகின்றது.

அதனைத்தொடர்ந்து இன்று மகாராஜபுரம் ஊராட்சியில் உள்ள பனங்குடம் கிராமத்தில் வசித்து வரும் 31 குடும்பங்களை சேர்ந்த 105 இருளர் இன மக்களக்கு சாதிசான்றிதழ் வழங்கப்பட்டது. இதுவரை தஞ்சாவூர் மாவட்டத்தில் 250மேற்பட்ட இருளர் மற்றும் ஆதியன்குடி இன மக்களுக்கு சாதிசான்றுகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர்களின் பொருளாதார மேம்பாடு அடைய வழி வகுக்கும். மேலும் தமிழக அரசு மூலமாக இவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தர வழங்கிட மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ப்பட்டு வருகிறது என்றும் தஞ்சாவூர் மாவட்டஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் லதா, திருவிடைமருதூர் வட்டாட்சியர் சுசீலா,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூங்குழலி, சூரியநாராயணன், ஊராட்சிமன்ற தலைவர் புவனேஸ்வரி இளங்கோவன் மற்றும் அரசுஅலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

முன்னதாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தம்பிக்கோட்டை வடகாடு இறால் பண்ணை செயல் பாடுகள் ஆய்வு செய்யப்பட்டது. பட்டுக்கோட்டை அமைந்துள்ள மாற்றுத் திறனாளிகள் முகாமில் சமையலறை, கழிவறை போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் சுகாதாரமாக உள்ளதா என்றும், மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து, தம்பிக்கோட்டை வடகாடு நியாய விலைகடையில் உணவுப் பொருட்கள் தரம் மற்றும் இருப்பு குறித்தும், பொன்னவராயன் கோட்டையில் ரூபாய் 5.20 கோடி மதிப்பீட்டில் தென்னை வணிக வளாகம் கட்டிட பணி நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்து மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இந்த வணிக வளாகத்தின் மூலம் தினமும் 100 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், இந்தவளாகத்தில் தேங்காய் பால் எண்ணெய், தேங்காய் துருவல் பவுடர், குழந்தைகளுக்கான எண்ணெய், நார்ச்சத்து மாத்திரைகள் என தேங்காய்யிலிருந்துமதிப்பு கூட்டப்பட்டஐந்துபொருட்கள் இங்குஉற்பத்திசெய்யப்படவுள்ளன. மேலும் ரூபாய் 2.40 கோடியில் 500 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு, தேங்காய்களை இறக்க பிளாட்பார்ம் ஆகியவை அமைப்பதற்கு அனுமதி கிடைத்தவுடன் பணிகள் முடிக்கப்பட்டு தென்னை வணிக வளாகம் விரைவில் முழு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

இவ்வாய்வின் போது பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், வட்டாட்சியர் ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சிஅலுவலர்கள் கோவிந்தராஜன், சாமிநாதன் மற்றும் அரசுஅலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர.

Updated On: 26 Oct 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?