/* */

பேரருவி, ஐந்தருவி பகுதி கடைகள் ஏலத்தை ஒத்திவைத்ததற்கு வியாபாரிகள் கண்டனம்

குற்றாலம் பேரூராட்சி சார்பில் பேரருவி, ஐந்தருவி பகுதி கடைகள் ஏலம் விடுவதை ஒத்திவைத்ததற்கு வியாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்

HIGHLIGHTS

பேரருவி, ஐந்தருவி பகுதி கடைகள் ஏலத்தை ஒத்திவைத்ததற்கு வியாபாரிகள் கண்டனம்
X

குற்றாலம் கடைகளுக்கான பொது ஏலத்தில் கலந்து கொள்ள வந்த வியாபாரிகள்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலகட்டமாகும். இந்த காலகட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் குற்றால அருவிகளில் நீராடி உற்ச்சாகமாக செல்வது வழக்கம்.

இதையொட்டி குற்றால பேரூராட்சி சார்பில் அருவிகரையோரம் உள்ள கடைகள்,வாகன காப்பகம், பாதுகாப்பு பெட்டகம் உள்ளிட்டவைகள் பொது ஏலம் விடப்படும். இந்நிலையில் இந்த ஏலமானது இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக குற்றாலம் பேரூராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொது ஏலத்தில் கலந்து கொள்ள வந்த வியாபாரிகள் கூறுகையில், ஏலம் விடுவதாக கூறப்பட்ட நிலையில் தாங்கள் அதற்கென வரைவு காசோலைகள் எடுத்து ஏலத்திற்கு தயாராக வந்துள்ளோம். ஆனால் இங்குள்ள அதிகாரிகள் ஏலத்தில் வெளிப்படை தன்னைதன்மை இல்லாமல் பழைய குத்தகைதாரர்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு ஏலத்தை அவர்களுக்கே விட முயற்ச்சித்து வருகின்றனர். இதனால் பேரூராட்சிக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

எனவே பொது ஏலத்தில் வெளிப்படைதன்மை வேண்டும் மேலும் குற்றாலம் பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் அமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 24 March 2022 4:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்