/* */

ரயில்வே துறையை கண்டித்து விரைவில் போராட்டம்: ஏஐஓபிசி முடிவு

தென்னக ரயில்வே துறையை கண்டித்து விரைவில் போராட்டம். குற்றாலத்தில் நடந்த AlOBC சங்க செயற்குழு கூட்டத்தில் முடிவு.

HIGHLIGHTS

ரயில்வே துறையை கண்டித்து விரைவில் போராட்டம்: ஏஐஓபிசி முடிவு
X

குற்றாலத்தில் உள்ள தனியார் விடுதியில் வைத்து ரயில்வே துறையின் AlOBC சங்கத்தின் மதுரை கோட்ட செயற்குழு கூட்டம் இன்று நடந்தது.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீடு படி வேலை வாய்ப்பை வழங்காத தென்னக ரயில்வே துறையை கண்டித்து விரைவில் போராட்டம். குற்றாலத்தில் நடந்த AlOBC சங்க செயற்குழு கூட்டத்தில் முடிவு.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள தனியார் விடுதியில் வைத்து ரயில்வே துறையின் AlOBC சங்கத்தின் மதுரை கோட்ட செயற்குழு கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு மதுரை கோட்ட தலைவர் அருணாசலம் தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் அப்சல், பொதுச் செயலாளர் தனசேகர் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றி பேசினார்கள். மேலும் இந்தக் கூட்டத்தில் இரயில்வேத்துறையில் தென்னக ரயில்வே நிர்வாகம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை முறையாக செயல்படுத்தாமல் இருந்து வருகிறது. இதைக் கண்டிக்கும் வகையில் AlOBC சங்கத்தின் சார்பில் ஒவ்வொரு கோட்டத்தின் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டமும் இதனைத் தொடர்ந்து தென்னக ரயில்வேத்துறை அலுவலகம் முன்பு விரைவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மதுரைக் கோட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Jun 2022 2:35 PM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  2. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  8. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  10. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...