/* */

குடியிருப்புப் பகுதியில் தஞ்சமடைந்த புள்ளிமான்: பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்

சுரண்டை தீயணைப்பு படையினர் சுமார் 5 வயது மதிக்கத்தக்க புள்ளி மானை லாவகமாக உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

HIGHLIGHTS

குடியிருப்புப் பகுதியில் தஞ்சமடைந்த புள்ளிமான்: பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்
X

மீட்கப்பட்ட புள்ளிமான்.

தென்காசி மாவட்டம் சுரண்டை ஆணைகுளத்தில் வசித்து வருபவர் ஜெயா. இவர் சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் கணிதவியல் துறை தலைவராக பணியாற்றி வருகிறார்.

காலையில் இவர் வழக்கம் போல் வீட்டிற்கு வெளியே வந்தபோது வீட்டின் அருகே புள்ளிமான் ஒன்று தஞ்சமடைந்திருந்ததை பார்த்து உடனடியாக சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துச்செல்வன் தலைமையில் ஏட்டு ரவீந்திரன் மற்றும் வீரர்கள் ராஜேந்திரன், திலகர், உலகநாதன், சரவணகுமார், சமுத்திர பாண்டி, குமார், விவேகானந்தன், பொன்ராஜ் ஆகியோர் சுமார் 5 வயதுள்ள புள்ளி மானை லாவகமாக உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

ஏற்கனவே கோடைகாலம் துவங்கி வனப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் வனவிலங்குகள் குடிநீர் தேடி ஊருக்குள் வரலாமெனவும், அதில் வந்த மானை நாய்கள் விரட்டியிருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 30 March 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...