/* */

சுந்தரபாண்டியபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியை சுரண்டை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

சுந்தரபாண்டியபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

சுந்தரபாண்டியபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியை சுரண்டை நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேரூராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தென்காசி தொகுதி செயலாளர் வின்சென்ட் ராஜ் தலைமை தாங்கினார். அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. தங்கள் கிராமப்புற பகுதியை நகராட்சியுடன் இணைக்கும்போது அனைத்து வகையான வரிகளும் அதிக அளவில் உயரும். அரசின் சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எனவே எங்கள் பகுதியை நகராட்சியுடன் இணைக்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 2 Sep 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    சாலவாக்கத்தில் 101 கேக்குகள் வெட்டி கலைஞர் பிறந்தநாள்
  2. சோழவந்தான்
    சோழவந்தான் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றியவருக்கு, பணி நிறைவு விழா..!
  3. மதுரை மாநகர்
    மதுரையில், பணப்பயன்கள் வழங்க முன்னாள் நகர கூட்டுறவு வங்கி பணியாளர்கள்...
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஹாக்கி கிளப் சார்பில் நாக்அவுட் ஹாக்கி போட்டிகள்..!
  5. சோழவந்தான்
    இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: மதிமுக துரை வைகோ நம்பிக்கை...!
  6. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் மோசமான நிலையில் இயக்கப்படும் அரசு நகர...
  7. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் மத்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர்...
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்ட நில முகவர்கள், தரகர்கள் நலச் சங்கத்தினர் எம்எல்ஏவிடம்...
  9. கும்மிடிப்பூண்டி
    திரிபுரசுந்தரி, திருவாலீஸ்வரர் திருக்கோயில் நூதன ஸ்த்துபி பிரிதிஷ்டை...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் ஒத்திகை பயிற்சி