/* */

குற்றாலம் திருக்கோவிலில் சந்தனாரி தைலம் காய்ச்சும் பணி துவக்கம்

குற்றாலம் திருக்கோவிலில் சந்தனாரி தைலம் காய்ச்சும் பணி துவங்கியது.

HIGHLIGHTS

குற்றாலம் திருக்கோவிலில் சந்தனாரி தைலம் காய்ச்சும் பணி துவக்கம்
X

குற்றாலம் திருக்கோவிலில் சந்தனாரி தைலம் காய்ச்சும் பணி துவங்கியது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு திருக்குற்றால நாதசுவாமி - குழல்வாய்மொழி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.

இதேபோன்று ஒவ்வொரு ஆண்டும் பங்குனி, சித்திரை மாதத்தில் ஏற்படும் கோடை வெப்பத்தின் தாக்கத்தை திருக்குற்றாலநாத சுவாமிக்கு தீர்க்கும் வகையில் சந்தனாரித் தைலம் தேய்த்து வழிபடுவது வழக்கம்.

இதற்காக கோவிலின் திரிகூட மண்டபத்தில் உள்ள அறையின் அடுப்பில் 2 பெரிய செப்பு பானைகளில் 48 மூலிகைகளைக் கொண்டு 2 மண்டலங்களாக அதாவது 96 நாட்கள் காய்ச்சிய பின்னர் சந்தனாரி தைலம் தயாரிக்கப்பட்டு 96 நாட்களுக்கு பின்னர் திருக்குற்றாலநாத சுவாமிக்கு சந்தனாரி தைலம் தேய்க்கும் வைபவம் நடைபெறும்.

இதற்காக இன்று கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு 2 செப்பு பானைகளில் முதல் நாளான இன்று வெட்டிவேர் போட்டு காய்ச்சும் பணியை கோவில் பட்டர்கள் துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள் மற்றும் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வீரபாண்டி மற்றும் வெளிநாட்டவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு செப்பு பானையில் மூலிகை வேர்களை போட்டு பணியை துவக்கி வைத்தனர்.

Updated On: 31 March 2023 6:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  3. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  5. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  6. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  7. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  8. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  9. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  10. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்