/* */

தென்காசி மாவட்ட தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 18 ஆயிரத்து 299 மாணவ, மாணவிகள் +2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

தமிழக முழுவதும் இன்று பிளஸ் 2 தேர்வானது தொடங்கியது. இந்நிலையில், இன்று தென்காசி மாவட்டம் தென்காசி பகுதியில் செயல்பட்டு வரும் மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வினை தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ள சிறப்பு வசதிகள் குறித்து முதன்மை கல்வி அலுவலரிடம் கேட்டு தெரிந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

தென்காசி மாவட்டத்தில் பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்து சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 18 ஆயிரத்து 299 மாணவ, மாணவிகள் +2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.

இன்று 13.03.2023 முதல் 05.04.2023 முடிய மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ள சூழலில், +2 பொதுத்தேர்விற்காக 64 தேர்வு மையங்கள் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், 1,322 சிறப்பு கண்காணிப்பு குழுவினரும், 5 பறக்கும்படை குழுவும்,150 ஸ்கேனிங் கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் மாணவ, மாணவிகள் எளிதாக தேர்வு மையத்திற்கு சென்று வரும் வகையில் ஏராளமான சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளது. இதேபோல், அண்டை மாவட்டமான விருதுநகர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் போக்குவரத்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு சிறப்பு பேருந்துகளை இயக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Updated On: 13 March 2023 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  7. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...
  8. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  9. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
  10. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...